முச்சந்தி

ஆப்கானிஸ்தானில் அழிக்கப்படும் ஹசாரா இன மக்கள்! … தலிபான்களால் தொடரப்படும் இனப்படுகொலை!! ….. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

ஆப்கானிஸ்தான் இனரீதியாக வேறுபட்ட தேசமாகும், இதில் பஷ்டூன் பெரும்பான்மையாகவும், ஹசாரஸ், ​​உஸ்பெக்ஸ், தாஜிக் மற்றும் பலுச் சிறுபான்மை இனமாக உள்ளனர்.
ஹசாரா ( Hazara )இனமக்கள் நீண்ட காலமாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் நீண்ட கால இனப்படுகொலைக்கும், கொடிய துன்புறுத்தலுக்கும் உட்பட்டுள்ளனர்.
தற்போதை ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரான ஹசாரார்கள்்பெரும்பாலும் மத்திய ஆப்கானிஸ்தானில் வாழ்கின்றனர்.
கடந்த காலங்களில் தலிபான்களால் அதிகமான சித்ரவதைகளையும், இன அழிப்பையும் எதிர்கொண்டவர்கள் இந்த ஹசாரா மக்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 2018 வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய பெரும்பான்மையான தாக்குதல்கள், சிறுபான்மை மக்களை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளன.
மத அடிப்படையில், பெரும்பாலான ஹசாரா ஷியா முஸ்லீம் விசுவாசத்தின் உறுப்பினர்கள், குறிப்பாக சிறுபான்மை பிரிவினரின் உறுப்பினர்கள். 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், பெர்சியாவிலுள்ள சஃபாவி வம்சத்தின் காலத்தில் ஹசாரா ஷியைசத்திற்கு மாற்றப்பட்டதாக வரலாற்றை அறிஞர்கள் கருதுகின்றனர்.
துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான ஆப்கானியர்கள் சுன்னி முஸ்லீம்கள் என்பதால், ஹசாரா பல நூற்றாண்டுகளாக துன்புறுத்தப்பட்டு, பாகுபாடு காட்டப்பட்டு வருகிறது.
தலிபான் மற்றும் அல்-கொய்தாவால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ஹசாரா இன மக்கள் பலர் பலியாகி உள்ளனர்.
ஆப்கானில் சிறுபான்மை இனம் :
அதிலும் குறிப்பாக ஹசாரா இன மக்களையே அதிகமாக தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஆப்கன் நாட்டில் மீண்டும் 2021 ஆகஸ்ட்டில் ஆட்சிக்கு வந்த நிலையில், கடந்த சில
மாதத்தில் மட்டும் ஹசாரா இனத்தைச் சேர்ந்த பலர் கொலை செய்தது தலிபான்கள் என்கிறது மனித உரிமைகள் அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் சமீபத்திய அறிக்கை.
அமெரிக்கர்களை துரத்தி ஆப்கானிஸ்தானை மீண்டும் ஆக்கிரமித்துள்ள தலிபான்களால் அந்நாட்டின் சிறுபான்மை சமூகமான ஹசாராக்கள் ஆழ்ந்த அச்சத்தில் உள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சர்வதேச நாடுகள் மத்தியில் தலிபான்கள் குறித்து பல கண்டனங்கள் வந்துள்ளன.
மீள இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களால் அச்சத்தை ஹசாரா மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்,
ஹசாரார்கள் பூர்வீகம் :
ஆப்கானிஸ்தானை 13-ஆம் நூற்றாண்டில் ஆண்ட மங்கோலிய சாம்ராஜ்ஜியத்தை செங்கிஸ் கான் மற்றும் அவரின் ராணுவ படையின் வழிவந்த சந்ததியினரே இந்த ஹசாரா இன மக்கள். மத்திய ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதியான ‘ஹஜாரிஸ்தான்’ பகுதியில் வாழும் இந்த இன மக்கள் ஆப்கானிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர் ஆவார்கள்
தற்போதைய ஆப்கானிஸ்தானின் ஒட்டுமொத்த மக்கள் 12 சதவீத அளவே இவர்கள் உள்ளனர். முன்பு, பெரிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் பல்வேறு அடக்குமுறைகளால் ஒடுக்கப்பட்டு, இந்த நிலைக்கு வந்துள்ளனர்.
இன்று ஆப்கானிஸ்தானில் கிட்டத்தட்ட 3 மில்லியன் ஹசாராக்கள் உள்ளன, அங்கு அவர்கள் பஷ்டூன் மற்றும் தாஜிகளுக்குப் பிறகு மூன்றாவது இனமாக அமைந்துள்ளனர். பாக்கிஸ்தானில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஹசாராவும், பெரும்பாலும் குவெட்டா, பலூசிஸ்தான், அத்துடன் 135,000 ஐயும் ஈரானில் சுற்றி வாழ்கின்றனர்.
பாரசீக மொழியான ஹசராகி என்ற டாரியின் பேச்சு வழக்கில் பேசுவதால் ஹசராக்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு தெரிகிறார்கள்.
ஹசாரக்கள் மீதான வரலாற்று படுகொலை :
ஆப்கானிய இஸ்லாமியர்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் சுன்னி
இஸ்லாமியர்கள். ஆனால், ஹசாராக்களோ ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்தவர்கள். இதுவே இன அழிப்பு மோதலுக்கான முதல் காரணம்.
1880 வயதில் இருந்தே இவர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டுவருகிறார்கள்.
இந்த காலகட்டங்களில் ஹசராக்கள் அதிகம் வாழ்ந்து வந்த மத்திய ஆப்கானிஸ்தான் பகுதிக்கு பஷ்துன் அரசர் அமீர் அப்துல் ரஹ்மான் படையெடுத்து, கண்ணில் கண்ட ஷியா பிரிவு இஸ்லாமியர்களை கொன்று அழிக்க தனது படைக்கு உத்தரவிட்டார். இந்தப் படையெடுப்பு ஹசாரா இன மக்கள் கண்ட மோசமான படையெடுப்பாக அமைந்தது. ஏனெனில், இதில் அந்த இன மக்கள் தொகையில் பாதி பேர் உயிரை இழந்த நிலையில், பலர் கடத்தப்பட்டனர். பலர் அடிமைகளாக வெளிநாடுகளில் விற்கப்பட்டனர்.
அமீர் அப்துல் ரஹ்மான் படையெடுப்புக்கு பின் தலிபான்களால் இன்றுவரை மோசமான சித்ரவதைகளை இந்த மக்கள் அனுபவித்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டு ஆப்கான் போரில் கை ஓங்கியிருந்த தலிபான்கள், தங்களின் முக்கியக் குறியாக ஹசராக்களைத் தாக்கி அழித்தனர். அந்த இனத்தைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமானோரை படுகொலை செய்தனர்.
சோவியத் யூனியன் தலையீடு:
சோவியத் யூனியனின் தலையீட்டால் பாப்ராக் கர்மாலின் கீழ் சோசலிச அரசாங்கத்தை உருவாக்கியதைத் தொடர்ந்து, ஹசாரா மக்களின் உரிமைகள் மேம்பட்டன.
சோசலிச கட்சியின் அரசியலமைப்பு ஆப்கானிஸ்தானில் அனைத்து இனங்கள் மற்றும் இனங்கள் சமம் என்று அறிவித்தது. 1980களின் போது, ​​இராணுவத்திலும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஹசாரா மக்கள் அதிக முக்கியத்துவம் பெற்றனர். மேலும் ஒரு ஹசாரா அரசியல்வாதியான சுல்தான் அலி கெஷ்ட்மண்ட் 1980 தசாப்தத்தின் பெரும்பகுதிக்கு பிரதமராக பணியாற்றினார்.
சோவியத்-ஆப்கான் போரில் ஹசாராக்கள் பெரும்பாலான நகர்ப்புற மக்கள் காபூலில் கம்யூனிஸ்ட் ஆட்சியை ஆதரித்து போராடினர். அவர்கள் அப்போது அதிகாரப்பூர்வமாக மற்றய இனங்களுடன் சமமாக இருந்தனர்.
தலிபான்களால் தொடரும் சித்ரவதை:
சோவியத் இராணுவ விலகலின் பின் 1990களில் தலிபான் தளபதியாக இருந்த மௌலாவி முகமது ஹனிஃப், ஹசாரார்கள் ‘இஸ்லாமியர்களே அல்ல’ என்று கூறியதாகவும் அறியப்படுகிறது. 1996-ல் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பிறகு ஹசராக்கள் போன்ற சிறுபான்மை இனங்கள் மற்றும் அந்த இனத்தின் பெண்கள் கடுமையான சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, 1998-ல் ஆயிரக்கணக்கான ஹசராக்களை மசர்-ஐ-ஷரிஃப் நகரில் தூக்கிலிட்டனர்.
தலிபான் ஆட்சியின் போது (1996-2001), அரசாங்கம் குறிப்பாக ஹசாரா மக்களை துன்புறுத்துதலுக்கு மற்றும் இனப்படுகொலைக்கு இலக்காகக் கொண்டது. தாலிபன் மற்றும் பிற தீவிரவாத சுன்னி இஸ்லாமியவாதிகள் ஷியாக்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்று நம்புகின்றனர்.
இம் மக்கள் முரணானவர்களாக இருக்கிறார்கள், இதனால் அவர்களை துடைத்தெறிய தலிபான்கள் முயற்சிக்கின்றனர்.
ஹசராக்கள் மீது தலிபான்கள் இவ்வளவு வெறுப்பை உமிழக் காரணம், அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால்தான் எனக் கூறப்படுகிறது. ஹசராக்களை தலிபான்கள் `விசுவாசமற்றவர்கள்’ என்று கருதுவது உண்டு.
ஆனால் ஹசரா இனம் மதத்தை முன்னிருத்தி செய்யப்படும் பழமைவாத
கருத்துக்களுக்கு எதிரானது’ என்பதாகும். ஆனால் தலிபான்கள்
பழமைவாத கருத்துக்களைக் கொண்டவர்கள்.
ஹசாரா இனத்தைச் சேர்ந்த ஆப்கன் எம்.பி ஒருவர் ஒருமுறை அந்நாட்டு
நாடாளுமன்றத்தில், “ஹசாரா இன மக்களின் ஜனநாயக ஆதரவு, தலிபான்கள் பின்பற்றும்
பழமைவாதத்துக்கு எதிராக
இருப்பதால் அவர்கள் எங்களை
அழிக்க நினைக்கிறார்கள்” என்றார். பின்னர் அவரும் காணாமல் ஆனார்.
தலிபான்கள் தற்போதய ஆட்சி :
ஆப்கானிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டம் 2004, ஹசராக்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் தனது
அமைச்சரவையில் ஹசாரா
இனத்துக்கு பிரதிநிதித்துவம்
கொடுத்துவந்தார்.
ஆனால் இவையெல்லாம் முன்பு நிகழ்ந்தவை. தலிபான்கள் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது சிறுபான்மை இனமான ஹசராக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. அதற்கேற்ப தலிபான்கள் இன்று அரசை அமைக்கும் முன்பாகவே ஹசராக்களை பயமுறுத்தும் பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
மத்திய பாமியன் மாகாணத்தில் ஹசாரா அரசியல் தலைவர் அப்துல் அலி மஜாரியின் சிலையை தலிபான்கள் தகர்த்தனர். இதேபோல் சாஹர்ஹிந்த் மாவட்ட கவர்னராக பதவி வகித்து ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த சலிமா மசாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளனர். அவர்களின் தகவல்கள் தலிபான்கள் மீதான பழைய பயத்தை காட்டி
இருப்பினும், தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹினோ, “ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக தலிபான் அரசு பாகுபாடு காட்டுவதில்லை. ஷியாக்களும் ஆப்கானிஸ்தான் மக்களே என்றும், அவர்களும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும். அவர்களும் ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு, வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 4 – 6  திகதிகளில் மாலிஸ்தான் மாவட்டம்- முண்டாரக்ட் கிராமத்தில் நடந்த கொலைகளின் கொடூரமான விவரங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கஸ்னி மாகாணத்தை கைப்பற்றிய பின்னர் 9 ஹசாரா ஆண்களை படுகொலை செய்ததாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பேர் கடும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
தலிபான்களின் போர்க்குற்றங்கள் :
அத்துடன் சாட்சியங்களை அழிக்கும் வகையில் அனைத்து கையடக்க மற்றும் புகைப்பட கருவிகளின் பயன்பாட்டை தடுத்தனர்,
இந்தக் கொலைகளின் ஊடாக கொடூரமான தாலிபானின் கடந்த கால நினைவூட்டுவதாகவும் தாலிபான் ஆட்சியின் எதிர்காலத்தையும் பிரதிப்பளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஆயுத மோதலின் பின்னணியில் சித்திரவதை மற்றும் கொலை ஜெனீவா உடன்படிக்கைகளை மீறுகிறது.
மேலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் பிரகடனத்தின் கீழ் போர்க்குற்றங்களாகவே தலிபான்களின் இத்தகைய வன்முறைகள் பதிவாகின்றன.
சித்திரவதைகள் மற்றும் கொலைகள் குறித்து நேரில் கண்ட சாட்சிகளுடன் நேர்காணல்களை முன்னெடுத்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை , பல புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதராங்களை ஆய்வு செய்து வருகின்றது.
ஹசாரா தேசியவாத இயக்கம் :
ஹசாரா தேசியவாத இயக்கமானது ஹசாரா மக்கள் ஒரு தனித்துவமான தேசம் என்றும் அவர்களுக்கென Hazaristan ஒரு தேசிய-அரசுக்கு தகுதியானவர்கள் என்றும் கூறும் ஒரு இயக்கமாகும்.
1890 களின் ஹசராஜத்தின் சுதந்திர எழுச்சிகள் தொடங்கின.ஹசாரா தேசியவாதம் நவீனகால மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள ஹசரஜாத் பகுதியில் உள்ள மொழி மற்றும் மூதாதையர்களின் வேர்களிலிருந்து உருவாகிறது.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதால், பெரும்பாலும் பஷ்தூன் ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள் மீண்டும் ஹஜாராக்களை ஒடுக்கத் தொடங்கியதால் , அவர்கள் ஒரு சுதந்திர தேசத்திற்கு போராட எழுந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா, பிரித்தானியா,
ஸ்வீடன், நோர்வே, அமெரிக்கா, கனடா நாடுகளில் உள்ள ஹசாரா புலம்பெயர் மக்களிடமிருந்து கணிசமான ஆதரவை இந்த இயக்கம் பெறுகிறது. ஹசாரா தேசியவாதிகள் ஈரானிய ஆட்சிக்கு எதிராக இருந்தாலும், ஹசாரா தேசியவாதிகள் ஈரானிடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளனர் என பஷ்டூன் ஆதிக்கம் செலுத்தும் ஆப்கானிய அரசாங்கங்கள் பலமுறை குற்றம் கூறி வருகின்றன.
ஹசாராவின் ஒற்றுமைக்கான அமைப்பு ஹசராஜத்தை தளமாகக் கொண்டது,
இவ் அமைப்பின் நோக்கம் ஹசரஜாத் பகுதியில் அரசியல் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதாகும்.
1985 இல், ஹெஸ்பே வஹ்தாத்தில் உருவான அதே நேரத்தில், மசார்-இ ஷெரீப்பில் உள்ள ஹசாரா அறிவுஜீவிகள் இணைந்து ‘ஹசாரா ஒற்றுமை தேசியவாத அமைப்பை” உருவாக்கினர்.
தற்போது ஆப்கானிஸ்தான் ஹசாராக்கள் ஒரு சுதந்திர தேசத்தை நோக்கிய கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. தேசிய ஹசாரா அமைப்பு போராளிகள் ஆப்கானிய அரசாங்கத்திற்கு பதிலாக பெரும்பாலான தங்கள் பிரதேசங்களை கட்டுப்படுத்துகின்றனர். 2022 இல் மெஹ்தி முஜாஹித் தலைமையிலான பால்காப் எழுச்சிக்குப் பிறகு ஹசாரா தேசியவாதத்தின் மறுமலர்ச்சி மீண்டும் ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *