வெனிசுலாவில் உலகின் மிக வயதான மனிதர் ஜுவான் மரணம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் டச்சிரா மாகாணத்தை சேர்ந்தவர் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (வயது 114). இவர் கடந்த 1909 மே மாதம் 27-ந்தேதி ஆண்டியன் மாகாணம் தச்சிரா நகரில் பிறந்தார்.

மேலும் கடந்த 2022-ம் ஆண்டில் உலகின் உயிருடன் வாழும் மிக அதிக வயதான நபர் என்ற கின்னஸ் சாதனைக்கு இவர் சொந்தக்காராக மாறினார்.

இந்தநிலையில் தற்போது உடல்நலக்குறைவால் பெரெஸ் மோரா மரணம் அடைந்தார். இவருக்கு 11 குழந்தைகள், 41 பேரக்குழந்தைகள் மற்றும் 30 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். இவரது மறைவுக்கு அதிபர் நிகோலஸ் மதுரோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஜுவான் விசென்டே 1909 மே 27-ல் ஆன்டியன் மாகாணம் தச்சிராவில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார். 10 குழந்தைகளில் அவர் 9-வது குழந்தையாக பிறந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *