ஜேவிபியின் மாநாட்டில் சுமந்திரன்..! அரசியல் ஆய்வாளர்களை சிந்திக்க வைத்த விடயம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை மன்றத்தின் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) கலந்துகொண்டுள்ளார்.

குறித்த மாநாடானது, நேற்றையதினம் (04) மாலை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயாக்கவின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

சுமந்திரனின் அரசியல்

அதேவேளை, இந்த மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வங்கி மற்றும் நிதி அமைப்பின் உறுப்பினர் சமீர அல்விஸ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், ரணிலுடன் நெருங்கி தனது தந்து அரசியலை முன்னெடுத்து வந்த சுமந்திரன் தற்போது அனுரவின் கூட்டத்தில் பங்கேற்றுள்ள விடயம் அரசியல் ஆய்வளர்களை சிந்திக்க வைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *