செய்திகள்

கட்டுநாயக்க வந்து சேர்ந்தது சாந்தனின் உடல்!… ( காணொளி )

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்டு உயிர் துறந்த அரசியல் கைதி தில்லையம்பலம் சுதேந்திரராஜா (சாந்தன்) அவர்களது புகழுடல் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நீண்ட இழுபறிகள் பின்னராக எம்மால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

எனினும் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் அவரது சொந்த மண் பயணிப்பது தாமதமாகியுள்ளது.தற்போது பிரேத பரிசோதனைக்காக நீர் கொழும்பு வைத்தியசாலையில் உடலம் கையளிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னராக உடலத்தை கையேற்றப் பின்னராக இறுதிக்கிரியைகள் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்பிடும்.

முருகையா கோமகன்இணைப்பாளர்,குரலற்றவர்களின் குரல் அமைப்பு( அரசியல் கைதிகள் விடுதலைக்கான அமைப்பு)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *