கட்டுரைகள்
ஆரம்பம் முடிவை நோக்கி! முடிவுலிருந்து ஆரம்பம்!!….4…..சங்கர சுப்பிரமணியன்.

பல பல ஆண்டுகளாக பலபகுதிகளில் சிதறிக்கிடந்து அந்தந்த பகுதிவாழ் மக்களாகவே பழக்க வழக்க பண்பாடுகளால் மாறியபோதும் இஸ்ரேலை உருவாக்கும்போது அந்த பாகுபாட்டை பார்க்கவில்லை. சான்றாக கேரளாவிருந்தே இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தவர்களைக் கூறலாம்.
தமிழர் குமரிக்கண்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். நீரில் மூழ்கிக் கிடக்கும் பூம்புகாரில் வாழ்ந்திருக்கிறார்கள். இந்தியா முழுவதிலும் மொஹஞ்சோதாரா, ஹரப்பா உள்ளிட்ட பல பகுதிகளில் பரந்து வாழ்ந்திருக்கிறார்கள். எனவே மற்ற இனத்தவரை போல எங்கு வாழ்ந்தாலும் இனத்தால் தமிழரே என்ற பரந்த மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டும்.
பிராந்திய அரசியல் பேசுவோரின் குறுகிய மனப்பாங்கிலிருந்து விடுபட்டு இனத்தால் தமிழர் என்று எப்போது ஒன்றினைகிறோமோ அன்று நம்மை யாராலும் அடிபைப்படுத்தி விடமுடியாது.
எந்த மார்வாடியாவது ஏழ்மை நிலையில் இருக்கிறானா? எந்த பஞ்சாபியாவது ஏழ்மையில் வாடுகிறானா? இல்லை என்றே சொல்லலாம். சில இனமக்கள் ஏழ்மையில் இருந்தாலும் இன உணர்வை விடாமல் எப்படி காத்துவருகிறார்கள்?
சொல்ல வேதனையாக இருந்தாலும் உண்மையைச் சொல்லியே ஆகவேண்டும். தமிழர் அனைவரும் நாட்டினால் தூண்டப்படும் பிரிவு மனப்பாண்மை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
ஒரே நாட்டில் பிராந்தியத்தால் தூண்டிவிடப்பட்ட உயர்வு தாழ்வு, மதம், சாதி, சைவம் மற்றும் அசைவம் என்று பிரித்து வைத்து சந்தர்ப்பவாதிகள் அவர்கள் பிழைப்பை நடத்த தம் இனத்தவரையே
பிரித்து வைத்திருக்கிறார்கள்.
இதை எல்லாத்துறையிலும் இணையவிடாமல் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார்கள். நாம் எல்லோரும் கற்றறிந்தவர்களே. எல்லோருக்கும் எல்லாமே தெரியும். பேரினமாகிய நம்மை
தம் சுயநலத்திற்காக குறுகிய மனப்பாங்குடைய நம்மினத்தவர்களே பல குறியீடுகளைக் காட்டி எப்படி பிரித்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்கு நன்றே தெரியும்.
நாம் வறட்டு கௌரவத்துடன் ஒருவரை விட ஒருவர் சிறந்தவர் போல் எண்ணிக்கொண்டு ருத்ராட்சிர பூனைபோல் இருக்குறோம். பின்னி விடப்பட்டுள்ள இந்த சூட்சுமத்தின்
பிடியை ஏதே பெருமை போல் எண்ணி வருகிறோம்.

அந்த மாயையிலிருந்தே வெளிவரமுடியாத நம்மால் எந்த காலத்தில் இனவிடுதலைக்கு மூலக்கூறு எது என்பதை தெளிந்து தேர்ந்து முன்னேறப் போகிறோம் என்பது ஆங்கிலேயர்கள் சொல்வது போல் மில்லியன் டாலர் கொஸ்டின்.
அத்தைக்கு எப்போது மீசை முளைப்பது? சித்தப்பா என்று எப்போது அழைப்பது. நம்மை அவன் ஆழ்கிறான் இவன் ஆழ்கிறான் என்று சொல்லிக்கொண்டே உள்ளுக்குள் ஒருவருக்கு ஒருவர் குழி பறித்து வாழ்ந்து முடிவதுதான் முடிவாகிவிடுமோ என்று எண்ணும் சூழலே தெரிகிறது.
கொரனா தொற்றுவந்து உலக மக்களையே யதார்த்தத்தை உணரவைத்து விட்டது. தன்மானச் சிங்கங்களான தமிழரை மட்டும் படைத்த பிரம்மா வந்தாலும் பண்படுத்த முடியாதோ?
அவரே மும்மூர்த்தியில் ஒருவராக இருந்த செல்வாக்கை இழந்து இன்று தமிழனைப்போல் கடாரம் வென்றாலும் இருக்கும் காணியும் போவதைப்போல் தனக்கென அதிகமாக ஆலயங்களும் இல்லாது செல்வாக்கையும் இழந்து அவதிப்படுகிறார்.
நானே பலவேளைகளில் நினைப்பதுண்டு. நம் பக்தகோடிகளிடம் கேட்பதுண்டு. எல்லோரும் திருப்பதி வெங்கடேசா காப்பாற்று என்கிறீர்கள். சபரிமலை சாஸ்தாவே காப்பாற்று என்கிறீர்கள். திருச்செந்தூர் முருகா காப்பாற்று என்கிறீர்கள்.
நமது பிரம்மா, அவர் இருக்க இடம் அற்றவர்தான் இருந்தாலும் அவரது பெயரையாவது சொல்லி என்னைப் படைத்த பிரம்மாவே காப்பாற்று என்று யாராவது வேண்டுகிறார்களா? நமது அரசியலில் அரசியல் திறமையைக் கடைப்பிடிப்வன்தான் ஆட்சியை பிடிக்கிறான். வெறும் திறமை மட்டும் கதைக்குதவாது.
இந்தவகையில் நம்மைப் படைத்த தாய் தந்தையரை கடவுளாகப் பார்க்கிறோம். ஆனால் நம்மையெல்லாம் படைத்த பிரம்மா தன் இடத்தை இழந்துவிட்டார். இதை நடைமுறை அரசியலில் பார்க்கலாம். எவ்வளவோ அறிவும் திறமையும் இருந்தும் பிரம்மாவைப்போல் ஓரங்கட்டப் படுவதை நாம் அறிவோம்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)
![]()