ஆண்டுக்கு ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் நாய்… எப்படி?

இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் “Influencers” எனும் அதிக செல்வாக்குமிக்கவர்களாகத் திகழ விரும்புகின்றனர்.

அவர்களுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருப்பார்கள்.

நிறுவனங்கள் அவற்றின் பொருள்களை விற்க influencersஇன் விளம்பரத்தை நாடுகின்றன.

அவர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.

நாய்களும் அந்தத் தொழிலைச் செய்யலாம் என்று தெரியுமா?

டக்கர் பட்ஸின் (Tucker Budzyn) எனும் Golden Retriever ரகத்தைச் சேர்ந்த நாய், ஒரு வருடத்தில் 1 மில்லியன் டாலரைச் சம்பாதிக்கிறது.

சமூக ஊடக செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் டக்கர் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதாக Printed Pet Memories நிறுவனம் நடத்திய ஆய்வு காட்டுகிறது.

இரண்டு வயதிலிருந்து ஆதரவளிக்கப்பட்ட விளம்பரங்கள் வழி அதிகச் சம்பளம் பெறுகிறது டக்கர்.

“ஒரு YouTube விளம்பரத்துக்கு 40,000 டாலர் முதல் 60,000 டாலர் வரை கிடைக்கும். Instagram-இல் 3 முதல் 8 ‘stories’ எனும் பதிவுகளைப் பதிவிடுவதற்கு 20,000 டாலர் கிடைக்கும்” என்றார் டக்கரின் உரிமையாளர் கோர்ட்னி பட்ஸின்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் டக்கரை வாங்கியபோது அதற்கு Instagram பக்கத்தை உருவாக்கினார் பட்ஸின்.

அடுத்த மாதமே அதில் பதிவிட்ட முதல் காணொளி பரவலாகக் காணப்பட்டது.

Instagram காணொளிகளில் டக்கர் சமூக ஊடகங்களின் பிரபலமான போக்குகளில் ஈடுபடுவதைக் காணலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button