கார் ஏற்றுமதியில் ஜப்பானை விஞ்சி முதலிடம் பெற்றது சீனா
கார் ஏற்றுமதியில் ஜப்பானை தான் விஞ்சி, உலகின் மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளராக தான் விளங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.
இவ்வருட முதல் 3 மாதங்களில் ஜப்பானை விட அதிக கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது.
சீனாவின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, இவ்வருட முதல் 3 மாதங்களில் 1.07 மில்லியன் கார்களை சீனா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 58 சதவீத அதிகரிப்பாகும்.
அதேவேளை, இவ்வருட முதல் காலாண்டில் ஜப்பான் ஏற்றுமதி செய்த கார்களின் எண்ணிக்கை 954,185 ஆக உள்ளது. இது கடந்த வருட முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது 6 சதவீத அதிகரிப்பாகும்.
இலத்திரனியல் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்தமை மறறும் ரஷ்யாவுக்கான விற்பனைகள் அதிகரித்தமை ஆகியன சீனாவின் கார் ஏற்றுமதி அதிகரிப்புக்கான காரணங்களாகும்.
கடந்த வருடம் ஜேர்மனியை விஞ்சி, உலகின் இரண்டாவது மிகப் பெரிய கார் ஏற்றுமதியாளர் என்ற இடத்தை சீனா பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய வகை எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கான கேள்வி சீன கார் ஏற்றுமதிக்கு உதவியுள்ளது. சீனாவின் புதிய எரிசக்தி வானங்களின் ஏற்றுமதி 90 இற்கும் அதிகமான சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
டெஸ்லாவின் (Tesla ) சீனக் கிளை, MG பிராண்ட் உரிமையாளரான (SAIC) மற்றும் BYD ஆகியனவும் சீனாவின் புதிய எரிசக்தி வாகன ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளன.
![]()