கட்டுரைகள்

உயர்சாதி குழந்தைகளுக்காக பலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள்!…. சங்கர சுப்பிரமணியன்.

கட்டுரை என்பது சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கு பயன்பட வேண்டுமேயன்றி ஊமைவிழிகளாக பயனற்று போய்விடக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதை ஏன் சொல்கிறேன் என்றால் சமீபத்தில் நான் வாசித்த ஆங்கிலக் கட்டுரை என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அல் ஜஷீரா என்ற ஆங்கில ஊடகத்தில் ஜான்வி உப்புலெடி என்பவர் சமீபத்தில் எழுதிய கட்டுரைதான் அத்தாக்கத்தை ஏற்படுத்தியது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.தான் பெற்ற குழந்தையைத் தவிர மற்ற குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணை wet nurse என்று சொல்லும் அளவுக்கு சுலபத்தை ஆங்கிலமொழி எனக்கு கொடுத்திருக்கிறது என்கிறார். எனது தாய்மொழியான தெலுங்கு மொழியில்அப்படியான ஒரு சொல் இல்லை என்கிறார்.மேலும் இதுபற்றி கல்வியாளரும் தெலுங்கு எழுத்தாளர் மற்றும் முனைவருமான முனைவர் K.N.மல்லேஸ்வரி என்பவருடன் விசாரித்துக் கொண்டிருந்த போது உலோகத்திலான பாலூட்டும் கோப்பையை விளக்கும் சொல்லான “பாலாடை” என்ற இச்சொல் மற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களைக் குறிப்பதாக சில தெலுங்கு இலக்கியங்களில் கூறப்பட்டிருப்பதாகச் சொன்னாராம்.ஆனால் “மடிகா” என்ற தாழ்த்தப்பட்ட இனத்திலுள் முதியவர்கள் மற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணைக் குறிக்கும்படியான எந்த ஒரு சொல்லும் இல்லை என்கிறார்களாம். அதுதான் உண்மை. தமிழிலேயே அப்படி ஒரு சொல் இல்லாதபோது தமிழில் இருந்து உதிர்த்த தெலுங்கில் அப்படி ஒரு சொல் எப்படி இருக்க முடியும்?அப்படியானால் தமிழில் மற்ற குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குண்டான சொல் இல்லையா?என் சிற்றறிவுக்கு எட்டிய அளவில் அப்படியொரு சொல் இல்லையென்றே எண்ணுகிறேன். தமிழார்ந்த அறிஞர்கள் எவராவது சொன்னால்தான் உண்டு.மற்றவர்களுக்காக குழந்தை பெற்றுத்தரும் பெண்களை வாடகைத்தாய் என்று சொல்கிறோம். அச்சொல் சமீபத்திய கண்டுபிடிப்பு. அதே போன்றுதான் ஆங்கிலத்தில் nurse என்ற சொல் வழக்கிலிருந்து wet nurse என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.தமிழில் செவிலி என்ற சொல் இருந்தாலும் அதை வளர்ப்புத்தாய் என்று தான் சொல்கிறோம். ஆனால் வளர்ப்புத்தாய் தாய்ப்பால் கொடுப்பாள் என்பதற்கு ஆதாரமில்லை. இனிமேல்

கட்டுரைக்குள் நுழைவோம்.உயர்சாதி குழந்தைகளுக்காக பலூட்ட வற்புறுத்தப்பட்ட தாழ்ந்தசாதி பெண்கள்!பிப்ரவரி மாதம் இரண்டாயிரத்து இருபத்தியொன்று அன்று பிற்பகல் வெயிலில் எனது பெரிய அத்தைஎல்லாம்மாவுடன் வேப்பமரத்தடி நிழலில் அமர்ந்திருந்தேன்.தென்னிந்தியாவின் தெலுங்கனா மாநிலத்திலுள்ள ராமாவரம் என்ற சின்ன நகரில் இருந்தோம். கோடைகால ஆரம்பத்தின் வெப்பம் காற்றில் இருந்தது.எனது அப்பா வழி அத்தையை எனது பதினான்கு வயதிலுருந்து பார்க்கவில்லை, ஆனால் இப்போது, பத்து ஆண்டுகளுக்குப்பின் என்னை கைநீட்டி வரவேற்றாள்.எனது அப்பாவின் அரசாங்க வேலையால் அடிக்கடி இடம் மாறினோம் நானும் வளர்ந்து கொண்டிருந்தேன். ஆண்டுக்கு ஒருமுறை கிழக்கு தெலுங்கானாவிலுள் எனது சொந்த ஊரான தொர்னகல்லுக்கு திருமணம் அல்லது சாவுக்காக செல்லும்போது எனது உறவினர்களை பார்ப்பேன். ஆனால் ஒவ்வொருமுறை எனது உறவினர்களை சந்திக்கும்போதும் என்னைப்பற்றி அறிந்து கொள்ள அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கேள்விகேட்டு தொந்நரவு செய்வேன்.அன்றும் வேறுபாடின்றி, தூரத்து உறவினரின் நினைவுநாளுக்காக அந்த வீட்டினருகேஎங்கள் குடும்பத்தினர் கூடியிருந்தபோது நானும் எல்லம்மாவும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தோம்.எழுபத்தைந்து வயதான எல்லம்மா கரும்பச்சை நிற புடவை உடுத்தி தலைமுடியை அழுத்தி கொண்டை போட்டிருந்தாள். எனது கேள்விகளுக்கு எல்லாம் உறுதியான குரலில் பதில் சொன்னாள். அவளது சிறுவயதில் பட்ட துன்பங்கள் எண்ணி வருந்தும்போது அவளது பார்வை நிலைகுத்தி நின்றது.தென்னிந்திய மாநிலங்களில் வாழும் தாழ்த்தப்பட்ட  மடிகர் இன மக்களான நாங்கள் இந்திய வரணாசிரம சாதி அடிப்படையில் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுகிறோம்.

நான்குநிலை வர்ணாசிரமப்படி, பிராமணர்கள்(மதச்சடங்கு செய்பவர்கள்), அவர்களைத் தொடர்ந்து சத்திரியர்கள் ( போராளிகள் மற்றும் அரசர்கள்), வைஷ்யர்கள்(வியாபாரிகள்) மற்றும் சூத்திரர்கள்(தொழிலாளர்கள்). ஐந்தாவதாக வரும் தாழ்த்தப்பட்டவர்கள் சாதிக் கட்டமைப்புக்குள் வரமாட்டார்கள்.(தொடரும்)-சங்கர சுப்பிரமணியன்.நன்றி: ஜான்வி உப்புலெடி/ அல் ஜஷீரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *