‘உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ – ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படும் நடிகை ஊர்வசி ரவுத்தலா!

தமிழில் ‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தலா. இவர் இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். அதேவேளை, நடிகை ஊர்வசி ரவுத்தலா இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவ்வப்போதும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை, ஊர்வசி ரவுத்தலா சில நேரங்களில் ரிஷப் பண்ட்டை விமர்சிக்கும் வகையிலும், சில நேரங்களில் ஆதரவு தெரிவிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இதனிடையே, ரிஷப் பண்ட் நேற்று கார் விபத்தில் சிக்கினார். தனது சொந்த ஊரான உத்தரகாண்ட்டின் ரூர்க்கீக்கு தனது சொகுசு காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். அவருக்கு தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பண்ட் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் பண்ட்டின் பெயரை குறிப்பிடாமல் நடிகை ஊர்வசி ரவுத்தலா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை டுவிட் செய்துள்ளார். இது தொடர்பாக ஊர்வசி ரவுத்தலா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், உங்களுக்காகவும், உங்கள் குடும்பமும் நலம் பெற நான் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். இதில், நடிகை ஊர்வசி ரிஷப் பண்ட்டின் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button