98 வயதில் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவர்- ‘இனி ஒரு நாவல் எழுதப்போகிறேன்’
இத்தாலியின் ஆக மூத்த மாணவர் கியூசெப்பே பெட்டர்னோ (Giuseppe Paterno), அவரது 98வது வயதில் மீண்டும் பட்டம் பெற்றுள்ளார்.
பெட்டர்னோ ஈராண்டுக்கு முன்பு பலேர்மோ (Palermo) பல்கலைக்கழகத்தில் வரலாறு, தத்துவம் ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். அப்போது அவருக்கு வயது 96.
முதுகலைப் பட்டத்தையும் பெற விரும்பிய பெட்டர்னோ அதே துறையில் அந்த வருடமே பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்தார்.
பெட்டர்னோ தற்போது அதிக மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டத்தையும் வெற்றிகரமாகப் பெற்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
ஓய்வெடுக்க விரும்பாத பெட்டர்னோ தட்டச்சின் மீது தீராக் காதல் கொண்டவர். அவரிடம் உள்ள பழைய தட்டச்சுப்பொறியைக் கொண்டு ஒரு நாவலை எழுதப்போவதாகக் கூறியுள்ளார்.
சிறு வயதில் படிப்பில் அதிக ஆர்வமிருந்தும் குடும்பச் சூழல், போர் காரணமாக அவரால் படிப்பைத் தொடரமுடியவில்லை.
இருப்பினும் படிப்பின் மீது இருந்த தீரா ஆர்வத்தால் பெட்டர்னோ தள்ளாத வயதிலும் பட்டம் பெற்றுத் தனது கனவை நினைவாக்கியிருக்கிறார்.
![]()