கவிதைகள்
ஆசை வேண்டுகோள்!…. ( கவிதை ) … அகரம் செ.துஜியந்தன்.

என் வீட்டுத் துயரம் தீராதா?
எங்கள் ஆசைகள் எல்லாம் நிறைவேறுவது எப்போது
மூன்றடுக்குக் கல்வீடு கட்டி குடிபுகுவதே எனது பேராசை
அன்பு மனைவிக்கு தங்கத்தில் தாலி
காப்புகள் மாலைகள் செய்து போடவேண்டும்
மகளுக்கு மணம் முடித்து மகிழ்வது எப்போது
மகனுக்கு தொழில் கிடைப்பது எப்போது
கடன் இல்லா வாழ்க்கை நான் வாழ்வது எப்போது
கடவுளே உன் கருணை கிடைக்கட்டும்
காலையும், மாலையும் கும்பிட்டு வேண்டுகிறேன்
![]()