கட்டுரைகள்

நாங்கள் யார்?…. 2 ….( கட்டுரை ) …. ஏலையா க.முருகதாசன்.

நாங்கள் யார் என்பதன் பார்வை ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டது அல்ல.நாங்கள ; யார் என்பதை’ நான் யார்?’ என்று நாங்களிலிருந்து பிரித்தெடுத்து பார்ப்போமானால் எமது மூளையின் உள்வாங்கும் திறனையும், எண்ணம் சிந்தனை என்ற அடுக்கடுக்கான தேடல்களையும் தாண்டி குடத்தினுள் நிறைந்து வழியும் நீர் போல மூளை என்ற கொள்கலனும் உள்வாங்க முடியாது திணறும்.

இன்றைய உலகின் எந்தவொரு மானிடவியலாளராலும் மனிதர்களை, அவர்களின் எந்தவொரு எச்சமும் இனி இல்லை இவர்களின் குணம் இவ்வளவுதான்,இவர்களுக்குள் ஊற்றெடுக்கும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களும் சிந்தனைகளும் இத்துடன் அற்றுவிட்டது என குணங்களை எந்தவொரு ஆய்வின் மூலமும் கண்டறியவே முடியாது.

உலகத்திலிருக்கின்ற பலராலும் வியந்து பார்க்கின்ற மானிடவியலாளர்களின் நூல்களை மானிடவியலாள ஆய்வாளர்களே இதுவல்லவா நூல் என வியந்து பார்த்து அது தொடர்பான கலந்துரையாடல்களும், தொலைக்காட்சி விவாதங்களும்,தலைசிறந்த அச்சு ஊடகங்களில் அது தொடர்பான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கூட நாங்கள் யார் என்பது ‘மனிதர்களை ஆய்வு செய்து முடித்துவிட்டோம்’ என்ற ஒரு எல்லையைத் தொடவே தொடாது.

ஒரு மானிடவியலாளன,; ஒரு மனிதனை, ஒரு நாளைக்கு, ஒரு மிகச் சிறுபகுதியாக ஒரு நாளைக்கு ஒரு ஆய்வாக, அந்த ஆய்வைக் கட்டுரையாக எழுதினால்கூட அவன் தனது வாழ்நாளை அதற்காக அர்ப்பணித்தால்கூட அவனால்

முழுமையாக அந்த மனிதனை மிச்சமில்லாமல் ஆய்வு செய்யவே முடியாது.இது எது போன்றது என்றால் பிரபஞ்சத்தை எந்தவொரு இன்றிருக்கின்ற நவீன விஞ்ஞானத்தாலோ, இனிவரப் போகின்ற நவீன விஞ்ஞானத்தாலோ அளந்து இவ்வளவுதான் எல்லையென்று சொல்ல முடியாதோ அது போன்றதே எந்தவொரு மானிடவியலாளராலும் நாங்கள் யார் என்பதைக் கண்டறியவே முடியாது.

நடந்து கொண்டேயிருக்கலாம் எல்லையைத் எக்காலத்திலுமே அடைய முடியாத பயணந்தான் மனிதரை முற்றுமுழுதா அறிதல் என்ற மானிடவியல் ஆய்வு.

ஒட்டுமொத்த மனிதகுலத்திலிருந்து இனம் சார்ந்து மொழி சார்ந்து மதம் சார்ந்து ஒவ்வொரு பிரிவாகப் பிரித்தெடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு குழுமத்திலிருந்தும் தனித்தனி அலகாக மனிதனை அவன் யார் என ஆய்வு செய்தால்கூட அணுக்கூட்டத்திலிருக்கும் தனித்தனி அணுக்களை மீண்டும் மீண்டும் பிரித்தெடுத்து ஆய்வு செய்வது போலவேயிருக்கும் மனிதர்களை ஆய்வு செய்வதுமாகும்.

‘எக்ஸ்’ என்று ஒரு மனிதனைப் பிரித்தெடுத்து ஆய்வு முறையைக் கொள்வோமானால்,அவனுடைய அப்பா அம்மா சகோதரங்கள் உறவு முறைகள் நண்பர்கள் எனக் குழுமத்திலிருந்து அவன் வேறுபட்டவனாகவே இருப்பான்.மரபணுக்கள் தொடராக பகார்க்கப்படினும் அவன் மாறுபட்டவனாகவே காணப்படுவான்.

இந்தக் கட்டுரையானது ஒரு மனிதனை, அவனோடு ஒத்த போக்குள்ளவன் என்று கருதப்படுவனிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் மானிடவியலை பதிவு செய்யப் போகின்றது.அதே வேளை ஒரு மனிதனின் எந்நேர இயல்பும் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்பதையும் மறுக்கிறது இக்கட்டுரை.

‘எக்ஸ்’ என்ற இவன் நல்லபிள்ளையென்று இவனோடு பழகுபவரால் கருதப்படுவன்.இவனோடு இவன் நிழலாக நான் பயனித்துக் கொண்டிருக்கிறேன்.

இவனின் உடல் செயல்பாடுகள் மூளைச் செயல்பாடுகள் அனைத்தையும் நான் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளேன்.’எக்ஸ்’ஐ பற்றி அவனது பெற்றோர், அவனுடைய சகோதரர்கள்,உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ‘எக்ஸ்’ஐ அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் சொன்னதற்கு முற்றிலும் மாறாகவே இவனுடைய ‘உள்ளிருக்கும்’ குணம் காணப்படுகின்றது.

‘எக்ஸ்’ உடன் நேற்று பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு வயதானவர் பேருந்தில் ஏறியவுடன், அவர் மீது அவன் இரக்கபட்டு தனது இருக்கையைக் கொடுத்துவிட்டு எழுந்து நின்றான்.

தொடை தெரியவும், இரண்டு மார்பகங்களுக்கிடையே தெரியும் பிரிவுகள் தெரிய உடை அணிந்த ஒரு இளம் பெண் அவனெதிரே நின்ற பொழுது, அந்தப் பெண் பெரிய பாவத்தைச ; செய்கிறாள் என வெறுப்புடன் முகத்தை திருப்பினான்.பேருந்து போய்க் கொண்டிருந்தது.

ஒவ்வொரு தரிப்பிலும் நிறையப் பயணிகள் ஏறினார்கள் அதைப் பார்த்த அவன், இவர்களுக்கு வேலை இல்லையா பேருந்தை மெனக்கெடுத்திருக்கிறார்கள் என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டு யாரையுமே ஏற்றாமல் போனால் நல்லது என்று நினைத்தான்.

கவர்ச்சியாக உடை அணிந்தவளை வெறுத்தவன் ஒவ்வொரு பேருந்து தரிப்பிலும் பேருந்து பலரை ஏற்றுவதற்காக மெனக்கெட்டதை வெறுத்தான், சினந்தான்.உடை விரும்பியபடி அணிவது என்பது அவரவர் உரிமையும் விருப்பமுமாகும்.பேருந்தில் பயணம் செய்வது அவரவர் தேவையைப் பொறுத்தது.இந்த இரண்டு விடயத்திலும்

‘எக்ஸ்’ஸின் உள்ளிருக்கை மனமும் மூளையும் வேறு வேறாக இருந்தது.உரிமையை வெறுத்தான்.தேவையை தேவையென அவனுடைய ‘உள்ளிருக்கை’ மனம் ஏற்கவில்லை.

அடுத்த நாள் அதே பேருந்தில் பயணம் செய்தோம்.இரண்டு கைகளாலும் இரண்டு தடிகளை ஊன்றியவாறு ஒரு காலைத் தூக்கிவாறு ஒரு பயணி பேருந்தில் ஏறினான், அவன் கால் முறிந்திருக்க வேண்டும் கட்டுப் போட்டிருந்தான் நிற்பதற்கே தடுமாறினான்.நேற்று எழுந்து இடம் கொடுத்தவன்’அவர் நின்று வரட்டும்,ஏன் நான் எழும்பி இடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தான்.தடிகளை ஊன்றியவாறு நின்றவரை „எக்ஸ்’ பார்த்த போதும் எந்தச் சலனமும் இல்லாமல்

முகத்தை வைத்திருந்தான்.

அந்தப் பேருந்தில் பலபேர் நின்று கொண்டு பயணம் செய்தார்கள்.ஒரு நடுத்தர வயதுப் பெண் அவன் இருக்குமிடத்திலிருந்து இரண்டு மீற்றர் துரத்தில் உட்கார்ந்திருந்தாள்.நீளக்காற்சட்டையும் றோஸ்கலரில் மேற்சட்டையும் போட்டிருந்தாள்.நேற்று உடை அணிந்திருந்தவள் போல அவளின் மார்பகங்களின் பிரிவுகள் தெரிந்திருந்தன.

அவளுடைய உடலும் றோஸ் கலராகவே இருந்தது. பேருந்தின் குலுக்களில் நின்று பயணித்தவர்கள் அங்குமிங்குமாக அசைகையில் அந்தப் பெண்ணைத் தொடர்ச்சியாக ‘எக்ஸ்’ஸால் பார்க்க முடியவில்லை.

அவள் தென்படும் கணநேரப்பொழுதைக் கூட வீணடிக்காது அவளின் மார்பகத்தை குத்திட்டுப் பார்த்தான்.அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.’எக்ஸ்’………

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button