கவிதைகள்
பக்குவம் வாழ்வே!… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

அணைத்தால் இன்பம்
அளித்தால் பேரின்பம்
பொறுத்தால் விடிவு
பொங்கினால் முடிவு
வெறுத்தால் காரிருள்
விரும்பினால் வெளிச்சம்
நிலைத்தால் நிம்மதி
குலைத்தால் பாதாளம் !
சுமந்தால் சுகம் ![]()
அமைந்தால் ஆனந்தம்
பிறந்தால் மகிழ்வு
பிரிந்தால் கலக்கம்
தேடினால் செல்வம்
வாடினால் முடக்கம்
ஓடினால் உவகை
ஓய்ந்தால் படுக்கை !
ஆசை ஆபத்து
அவசரம் பேராபத்து
தேடல் சிறப்பு
தெரிவு நல்மதிப்பு
கோபம் அழிப்பு
குரோரதம் நெருப்பு
பாவம் படுகுழி
பக்குவம் வாழ்வே !
![]()