கவிதைகள்

பக்குவம் வாழ்வே!… ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

அணைத்தால் இன்பம்

     அளித்தால் பேரின்பம்

  பொறுத்தால் விடிவு

     பொங்கினால் முடிவு

  வெறுத்தால் காரிருள்

      விரும்பினால் வெளிச்சம்

  நிலைத்தால் நிம்மதி

      குலைத்தால் பாதாளம்  !

 

  சுமந்தால் சுகம்                 

     அமைந்தால் ஆனந்தம்

  பிறந்தால் மகிழ்வு

     பிரிந்தால் கலக்கம்

  தேடினால் செல்வம்

     வாடினால் முடக்கம்

  ஓடினால் உவகை

      ஓய்ந்தால் படுக்கை  !

 

  ஆசை ஆபத்து

      அவசரம் பேராபத்து

  தேடல் சிறப்பு

      தெரிவு நல்மதிப்பு

  கோபம் அழிப்பு

     குரோரதம் நெருப்பு

  பாவம் படுகுழி

     பக்குவம் வாழ்வே  !   

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *