கவிதைகள்

முழுமதியாய் மிளிர்வோம்!… ( கவிதை )… சங்கர சுப்பிரமணியன்.

விண்ணளாவிய புகழ் எமக்கு இருந்தும்
மண்ணாள தனியாக ஒரு நாடும் இல்லை
கண்மணிகள் நமக்கு துணையாயிருப்பர்
பண்பால் நல்லதோரு நாட்டில் வைப்பபர்

மண்ணும் போய் மக்களும் போய் நிற்க
மண்ணும்கடலில் மூழ்கிப் போனதாலே
எண்ணிலடங்கா எம்பெருமை ஏற்றிடவும்
பன்னெடுங்காலம் பட்டபாடு கொஞ்சமில

என் அருமை இனக்காவலரே ஏற்றிடுவீர்
ஒருசபதமதை இனங்காக்க வேண்டுமென
நமக்குள்ளே பிளவுவந்தால் வேறுவேண்டா
நம்மினத்தை அழித்தொழித்து முடித்துவிட

ஒருதாய் வயிற்றில் உதித்திட்ட உயிரினிலே
ஒவ்வொன்றாய் குணமும் வெவ்வேறிருக்க
மண் மதம்சாதியென இனியும் பிரிவெதற்கு
மறவாது ஒருநொடி நினைத்தால் உணர்வீர்

சக்கரங்கள் சுழன்று சுற்றும்போது அங்கே
எதுவும் மேலென்றே கீழென்றோ இல்லை
நம்புகழ் மதிமறைத்த மேகமாய் நின்றாலும்
மேகமும் அகல முழுமதியாய் மிளிர்வோம்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *