கவிதைகள்

மெய்யென உணர்வாய்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்..

மாறிவரும் வாழ்வினிலே இங்கு
சூதும்வாதும் தொடர்ந்தே வரும்

ஆதலினால் ஒன்றும் குற்றமில்லை
எதுவும் இங்கு நிரந்தரம் இல்லை

செழித்து வளர்ந்து நின்ற மரமும்
சில சமயம் வேரோடு வீழ்வதுண்டு

காராம்பசுவின் கறந்த பாலும்கூட
காய்ச்சும்போது திரிந்து போகும்

மேய்ச்சல்நிலம் தீயால்  கருகிடினும்
மேய்வதற்கு துளிர்க்காமல் போகாது

மெய்நெறி கொண்டு வாழும் வாழ்வும்
மேன்மைதரும் மெய்யென உணர்வாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *