வந்தவழிக்கு துணைபோகிறார்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.
என் பெற்றோர் என்னை பண்பொடு
வளர்த்தார் என்பதறிவேன்
என் ஆசான் எனக்கும் இனிய வேதம் போதித்தாரென உணர்வேன்
இன்னா செய்தாரை ஒறுத்து நன்னயம் செய்கவென்பேன்
கோடாரி கொண்டு மரம்தனை
பிளக்கும்போது அதற்கு வலிக்காதோ
என்றெண்ணும் மாந்தரும் இங்குண்டாம்
மனத்தையே கிழித்து உதிரம் சிந்தவைத்தாலும்
வருந்தாது இவ்வுலகில் உலவும் மாந்தருண்டு
கருத்தை கூறவதில் தப்பொன்றுமில
ஏற்புடையதாக்குவதும்
ஏற்கமறுப்பதும்அவரவர் நிலைமை
என்கருத்தை மற்றோர்மேல ஒருபோதும் திணிக்க மாட்டேன்
இழிவாக ஒருபோதும் சாபமிட மாட்டேன்
வெள்ளத்தனைய மலர் நீட்டமென
அவர் உள்ளத்தின் உயர்வினை அறிந்து கொள்வேன்
சங்கு சுட்டாலும் வெண்மை தருமென சொல்லிச்சென்ற சங்கப்புலவர் வழி நடப்பேன்
உண்மைக்கு புறம்பாக எதையும் சொல்லேன்
ஒவ்வாக்கருத்தினை நான் உரையேன்
அறிவார் அவரும் நான் சொல்வதில் குற்றமிலவென்று
இருப்பினும் தாம் வந்தவழிக்கு துணையாகிறார்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()