கவிதைகள்
நடுகல்!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

நடுகல்லை மறப்பாரோ நம்தமிழரும்
நடுகல் அது சொல்லிடுமே நம்மரபை
குழுவைக் காத்துநின்ற தலைவனுக்கு
நினைவு கூறிடவே நடுகல் நட்டார்
ஊர்மக்களுக்கு அதிநன்மை செய்து
உயர்ந்து நின்றவர்க்கு கல்நட்டார்
உள்ளபடி வாழ்ந்த முதியோர்க்கும்
கும்பிடவும் குடும்பத்தார் கல்நட்டார்
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கதையாக கல்நட்டால் நடுகல்லுக்கு
இணையாக இங்கொரு கல்தோன்றுமா
நடுகல்லின் பண்பறிவீர் பார்வாழ்வோரே
நடுகல் நமக்கு நம் மரபுச் சின்னமன்றோ
நடுகல் பெருமைக்கு நினைவுச் சின்னம்
நடுகல் நம் தமிழினத்தின் விழுமியமாம்
அடுத்ததன் பரம்பரைக்கு அது வழியாம்
ஊரறிய உயர்ந்து நிற்கும் உண்மையது
தேர் திருவிழா என எதவுமே இல்லாது
நேரநேரம் வழிபாடென்ற வழக்கமிலாது
பாருக்கே பழமைகாட்டும் சான்றும் அது!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()