கதைகள்

பம்மாத்து உலகம்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

பம்மாத்து உலகம்!

பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்து 30 வருடங்கள் நிறைவு பெறுவதையிட்டு மலேசியாவில் சந்தித்தோம்.

பல்வேறு நாடுகளில் இருந்தும் நண்பர்கள் வந்திருந்தார்கள்.

சந்தித்தவுடன், “மச்சான் எப்பிடியடா இருக்கிறாய்?” எனது அவுஸ்திரேலியா நாட்டு நண்பன் கேட்டான்.

வீட்டில் இருந்து கிட்டிய தூரத்தில் அவன் இருக்கின்றான். இங்கு தொலைபேசி இலவசம். இருப்பினும் ஒருபோதும் நாங்கள் பேசவில்லை, சந்திக்கவில்லை.

2200 டொலர்கள் செலவழித்து மலேசியா வந்த நான் சொன்னேன்,

“நல்லாக இருக்கின்றேன்.”

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *