கவிதைகள்

அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும்!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

தனிமைச் சிறையினிலே தவித்திருந்த மக்களெலாம்
           சிறகை விரித்தபடி தெரிவெங்கும் திரழுகிறார் 
           உலகையே  வாட்டிநிற்கும் உயிர்கொல்லி கொரனோவோ
           விலகியே போனதாய் சொல்லுவார் யாருமுண்டோ  !
 
           விமானங்கள் பறக்கவிட விரைந்துள்ளார் இப்போது 
           கொரனோவும் மகிழ்வுடனே கூடவே குதித்துவரும் 
           சுகாதார மையமோ தளர்வெடுப்பைத் தடுக்கிறது 
           அரசியல் மையமோ அதைக்காணா நிற்கிறது   ! 
 
           வியாபார மையங்கள் வெளிச்சமாய் தெரிகிறது
           விழுந்தடித்து மக்களெலாம் தேடுகிறார் பலவங்கு 
           முகக்கவசம் செயலிழந்து முடங்கியே கிடக்கிறது
           முன்தள்ளி பின்தள்ளி  மக்களெல்லாம் திரிகின்றார்  ! 
 
           தேனீர் கடைகள் திறந்துமே இருக்கிறது 
           இடைவெளியைப் பாராமல்  ஏந்துகிறார் கோப்பைகளை 
           விற்கின்றார் முகத்தினிலும் முகக்கவசம் காணவில்லை
           விரும்பிக் குடிப்பாரும் அதைப்பொருளாய் கொள்ளவில்லை  !
 
           மருந்துவிற்கும் கடைகளிலும் பாதுகாப்பாய் அவரில்லை
           வாங்கச் செல்லும் எவரிடத்தும் முகக்கவசம் காணவில்லை
           பேருந்தில் செல்வாரும் பெரும்பாலும் அணிவதில்லை
           யாவருமே கொரனோவை மறந்துவிட்டே திரிகின்றார்  ! 
 
           கையுறைகள் அணியாமல் எரிபொருளை நிரப்புகிறார்
           காசுவாங்கும் கடைகளிலும் கையுறையைக் காணவில்லை
           காணாமல் கொரனோவும் ஆகியதே எனுமெண்ணம்
           எல்லோரின் மனதினிலும் எழுச்சிபெற்று இருக்கிறது  !
 
           கொண்டாட்டம் என்கின்றார் கூடலாம் என்கின்றார் 
           வண்டாகத் திரிவதற்கு வாய்ப்பென்றும் மகிழுகிறார் 
           திண்டாடித் திருந்ததுவும் திகைத்துமே இருந்ததும்
           இன்னுமே இதயத்தில் இருப்பதையும் மறந்துவிட்டார்  ! 
 
           ஒழிந்தது கொரனோவென்றால் உலகமே மகிழ்வடையும்
           அழிந்தது கொரனோவென்றால் ஆனந்தம் பெருகிநிற்கும் 
           கொரனோவோ ஒருபக்கம் பார்த்தபடி இருக்கையிலே
           அவசரமாய் திட்டமிடல் அகிலத்தைக் குலைத்துவிடும்  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *