கவிதைகள்
போற்றியவாய் தூற்றும்!… சங்கர சுப்பிரமணியன்.

வறுமை என்று கடன் கேட்டதால்
கடன் கொடுத்தேன் உதவினேன்
என்னை போற்றிப் புகழகேட்டேன்
எனக்கொரு தேவை ஏற்பட்டபோது
கொடுத்த பணத்தைக் கேட்டேன்
போற்றிப் புகழ்ந்த வாய் இன்று
என்னை தூற்றி இகழக்கேட்டேன்
வாடிக்கிடந்த செடி ஒன்றை கண்டேன்
எடுத்து வந்து நீரூற்றி வளர்த்தேன்
வளர்ந்தபின் தான் கண்டேன்
அது ஒரு நல்ல பழச்செடி என்றே
அது பழுத்து குழுங்கி பழங்கள் கொடுத்தது
நான் ஊற்றிய நீருக்கு பிரதிபலனாக
ஆண்டு தோறும் பழங்கள் தந்தன
அதுவே அது பழச்செடி இல்லாதிருந்தால்
பழங்கள் தரவில்லையென்று
பிடுங்கி அதை எறிந்திட மாட்டேன்
என்னை தூற்றி இகழ்ந்த வாய்
பழம் தராதவகை ஒருசெடி போல்தான்
பழம்தரா செடியை பிடிங்கி எறியாததுபோல்
நானும் வீணே இருந்திடமாட்டேன்
எனைநோக்கி தூற்றிய வார்த்தைகளை
என் மனதைவிட்டு தூக்கி எறிந்திடுவேன்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()