கவிதைகள்

முதிர் காலம்!…. தம்பி நந்தன்.

வயதாகி தளர்வாகி
கூன் விழுந்து
வரிகள் வெடித்து
நரையாகி சொல்லிழந்து
குருடாகி
கேள்மை இன்றி
செவிடாகி
பொலிவிழந்த
போதும்

காதலாகி கசிந்து
கை பிடித்த என்
கணையாளியே
கலங்காதே
கை பிடித்து
நடக்க தயங்காதே

வாழ்க்கை
என்னும் துடுப்பு
இன்னும்
நம் கையில்
கலங்காதே
கண்மணியே

வாழ்கை எனும்
கடல் மேலே
கடைசி வரை
சேர்ந்தே பயணங்கள்
போவோம் என்ற போது

இன்னுமொரு உலகப்புயல்
நம் வாழ்வில்

எல்லோராலும் கைவிடப்பட்டு
உனக்காய் நானும் எனக்காய்
நீயும் எவ்வளவு மகிழ்வோடு
இருந்தோம்

காலத்திற்கு கூட
எங்கள் ஒற்றுமையின்
காதல் பொறாமையாகிவிட்டது

கொர்னோ வடிவத்தில்
எங்கள் நேசம் பாசம்
எல்லாம்
சூறையாடப்பட்டு

ஒண்டி கட்டையாய்
வாழ்வு சேடம்
இழுக்கிறது

இறைவா கண் திறந்து
பாரையா..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *