பொதுத் தேர்தலும் நுட்பமும்!… ஏலையா க. முருகதாசன்.

தமிழரசுக் கட்சியின் ஏகோபித்த முடிவுக்கு அப்பால் தனிநபர் எடுக்கும் முடிவும் கிளம்பியுள்ள எதிர்ப்புக்கு மத்தியில் எதிர்வரும் பொதுத்தேர்தலை எதிர் கொள்வதற்காக வேட்பாளர்களை நியமிக்கும் பணியில் தமிழரசுக் கட்சி ஈடுபட்டு வருகின்றது.
இனிவரும் காலம் என்பது கட்சியை வழிநடத்துபவர்களாக நாடாளுமன்றத்திற்கு செல்பவர்கள் சரிக்குச் சரி பெண்களாகவும் இளந்தலைமுறையினராகவும் இருந்தால்தான் காலத்தோடொட்டிய சூழ்நிலைக்கெற்ற அரசியலை தமிழர்களால் செய்ய முடியும்.
முரண்டு பிடித்து, நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால,; நாலுகால் முயல்கள் இனிமேல் இல்லை நான் வைத்திருக்கிற முயலும் இனிப் பிறக்கப் போகும் முயல்களுக்கும் இனிமேல் மூன்றுகால் என அரசியல் கண்கட்டி வித்தை காட்டி தமிழர்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு போல்விடுகிற அரசியல் தமிழர்களுக்குச் செய்கின்ற துரோகமாகும்.
தமிழுக்காகச் சிறை சென்றோம், தமிழர்களுக்காக அது செய்தோம் இது செய்தோம் என தமது வாழ்நாளில் தாம் செய்தவற்றையே சொல்லிக் காட்டி தமிழர்களின் மூளைகளில் அனுதாபத்தை எற்படுத்தி அதுவும் இல்லாது இதுவும் இல்லாது கௌவைக்கும் உதவாத அரசியலை தமிழ் அரசியல்வாதிகள் விட்டுவிடுவதே தமிழர்களுக்குச் செய்யும் நன்மையாகும்.
தனக்கு வயது போய்விட்டது எனது பணியை வாரிசுகள் செய்யட்டும் என்ற உள்குத்து அரசியலை தமிழ்த்தலைமைகள் விடுதலே அவர்கள் இதுவரை தூய்மையுடன் உழைத்ததாகச் சொல்லிக் கொள்ளும் அரசியலுக்கு நல்லது.
அரசியல் என்பது மேன்மை பொருந்தியது புனிதமானது.அது வேலை அல்ல தொண்டு. நாடாளுமன்றம் என்பது வினைத்திறனாளர்களைக் கொண்டிருந்து மக்களுக்கு என்ன செய்யலாம் என விவாதங்கள் மூலமும் கலந்துரையாடல் மூலமும் செயல்படுத்தும் மன்றமாகும்.
நாடாளுமன்றத்தை, திணைக்களங்களாக பாவிக்கின்ற மனோபாவமும் அதனை இலங்கையிலிருக்கின்ற இரு இணங்களுக்கிடையில் முரண்பாடுகளை எற்படுத்தி, அவர்களைப் பரம எதிரியாக்குவதற்கே சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றம் வேலைவெட்டி இல்லாதவர்கள் அரட்டை அடிக்கும் சேம்பேறிகளின் இடமாக மாறிவிட்டது.
சூத்திரமாடுமாதிரி ஒரு விசயத்தை கதைத்தக் கதைத்து காலத்தை வீணடித்த நிலையே இன்றுவரை தொடர்கிறது, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிற அரசியலும் நடைபெற்றுக் கொணடும்; நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்த்தலைவர்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேணும் எப்படி அரசை அணுக வேண்டுமென்பதை தாயகத்தமிழர்கள் மட்டுமே சொல்வதற்கு உரித்துடையவர்கள் என்பதை புலம்பெயர் தமிழர்கள் அடிக்கடி மறந்துவிடுகிறார்களோ என நினைக்கத் தோன்றுகின்றது.
தாயகத்தமிழர்கள் சமாந்தரமான இரட்டைப் பாதையில் செல்கிறார்கள்.இதுவரையில் தமிழர்கள் தமது உரிமைக்காக நடத்தி வந்த அனைத்துப் போராட்டங்களினதும் தாற்பரியங்களை மறக்காதவர்களாகவும் இறுதியான உரிமைபெறும் வழியாக எடுத்துக் கொண்ட ஆயுதப் போராட்டம் அதன் தலைமை மாவீரர்களின் தியாகங்கள் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் எதனையும் மறக்கவில்லை.அதே வேளை அதைமட்டுமே அல்லது அதை நோக்கிய அரசியல் பாதை மிக கடினமானது என்பதை அவர்கள் உணராமலில்லை.
அதனால் இப்போதைய அரசின் அரசியல் சமிக்ஞைகளை மிகக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டிய பொறுப்பு தமிழ்த்தலைமைகளுக்கு உண்டு.
அவர்கள் சாத்தியப்படும் அரசியல் அணுகுமுறையை நோக்கி நகரும் போது புயலம்பெயர் தமிழர்களின் பிடிச்ச முயலுக்கு மூன்றுகால் என்ற கொள்கையால், அதை தமக்குரிய துருப்புச்சீட்டாகக் கொண்டு தமிழத்தலைமைகளுக்கு நெருக்கடியையும் நிர்பந்தத்தையும் எற்படுத்தி வருகிறார்கள்.
1958ஆண்டளவில் நான் பாடசசாலையில் படித்துக் கொண்டிருக்கும் போது, ‘இலங்கை மற்றைய நாடுகளைவிட 300 வருடங்கள் பின்தங்கி நிற்கின்றது என்று ஆசிரியர்கள் சொன்னார்கள்.
இப்பொழுது இலங்கை ஆயிரம் வருடங்கள் பின்தங்கிவிட்டது. அதிலும் தமிழர் தரப்பு இரண்டாயிரம் வருடங்கள் பின்தங்கி நிற்கின்றது.
இந்த பின்தங்கலைச் சரிப்படுத்துவதைத் தமிழத் தலைமைகளே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுவதே சிறப்பானதாகும்.புலம்பெயர் தமிழர்கள் பேசாமலிருப்பதே தாயகத் தமிழர்களுக்குச் செய்யும் பெரும் உதவியாகும்.
தமிழத்தலைமைகளும் புதியசிந்தனையும் விஞ்ஞான அரசியல் அணுகுமுறையைக் கையாளக்கூடிய மூன்று மொழிகளையும் பேசவும் எழுதவும் தெரிந்த இளந்தலைமுறையினரையும் அதே போன்று ஆண்கள் அளவு சமபங்கான பெண்களையும் உள்வாங்கித்தான் ஆக வேண்டும்.
எவடம் எவடம் புளியடி புளியடி என்ற அரசியல் இனிமேல் செல்லாக்காசே.
தமிழர்களின் நம்பிக்கை ஒளியாக இருப்பது இன்னமும் தமிழத் தேசியக்கூட்டமைப்புத்தான். உண்மையாகவே இலங்கை அரசியலை நடத்தும் பெரும்பான்மையின அரசியல்வாதிpகள் மிகவும் புத்திசாலித்தனமாகவே காயை நகர்த்துகிறார்கள்.
இதனைப் புரிந்து கொண்ட போதும் ஏதோ ஒரு எதிர்ப்பரசியல் நடத்த வேண்டும் என்பதற்காகவும் வெற்றிலை கிள்ளின கை பாவட்டம் இலையையாவது கிள்ள வேண்டுமென்ற கை நமைச்சலைப் போல தமிழ் எதிரப்;பரசியல்; என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வரவேண்டுமென்பதற்காக ஆங்காங்கே புதிய அரசியல் கட்சிகளை ஆரம்பித்து செய்ய முடியாது என்று தெரிந்தும் எதோ செய்யலாம் என நப்பாசை கொண்டு நிற்கிறார்கள்.
ஆங்காங்கே வௌ;வேறு பெயர்களில் தொடக்கி வைத்துள்ள தமிழ்க் கட்சி அரசியல்வாதிகளுக்கு தெட்டத் தெளிவாகவே தெரியும் தமிழத் தேசியக் கூட்டமைப்பால் முடியாதது தம்மாலும் முடியாது என்று.ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
எந்த ஒரு எதிர்ப்பு அரசியல்வாதிகளும் தமிழர்களின் உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு இதுதான் சிறந்த வழி என்று எந்தவொரு வழியையும் இதுவரை முன் வைக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாவீரர்களுக்கு துரோகம் செய்கிறது என்று சதா சொல்லி அவர்களை நின்ற இடத்திலேயே நிற்க வைத்து வருகின்றனர் புலம்பெயர் தமிழர் அரசியல் அமைப்புகளில் சில.
மாவீரர்களையும் பிரபாகரனையும் பணயக்கைதிகளாக வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முயல்கிறார்கள் இவர்கள்.இது மிகக் கேவலமான அரசியல்.மாவீர்களையும் பிரபாகரனையும் ஈழத்தமிழினம் ஒரு போதும் மற்க்காது.ஆனால் தமிழர்களின் சனத்தொகையை முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு அரசியல் செய்வதே சிறந்த வழி.
இப்பொழுது வேட்பாளர்களை நியமிப்பதில் தமிழத் தேசியக் கூட்டமைப்புக்குள் தான்தோன்றித்தனம் நிலவுகின்றது என்பது தமிழரசுக்கட்சியின் மகளிர் அமைப்பினரின் குற்றச்சாட்டு.
ஆளுமையுள்ள அரசியல்வாதியாக இருந்தவர் படுகொலை செய்யப்பட்ட திரு.ரவிராஜ் அவர்கள்.அவரின் மனைவியை வேட்பாளராக தெரிவு செய்ததை அனைவரும் வரவேற்றுள்ளனர். திருமதி.சசிகலா ரவிராஜ் அவர்கள் வினைத்திறமிக்க நுட்பமான மதி கொண்ட அரசியல்வாதியாக தன்னை அவர் உருவாக்கிக் கொள்ளும் போதும்,சமகால இலங்கை அரசியலில் கடினமான சூழ்நிலையை இலகுவழியில் சாத்தியப்படுத்தலில் அவரின் பங்கு எத்தைகயது என்பதை காலந் தீர்மானிக்கும்.
அதே போல மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவிருந்த
திருமதி.அம்பிகா சற்குணநாதனையும் தெரிவு செய்திருக்கிறார்கள். கொழும்பிலும் தமிழத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவிருப்பதால் அது ஒரு அரசியல் சாணக்கியமாகவிருக்கலாம்.ஆனால் நாடாளுமன்றத்தில் அவரின் அரசியல் ஆளுமை எத்தகையதாக இருக்கும் என்பதை இப்பொழுதே எடைபோடுதல் வேண்டும்.
தமிழர்களின் அதரிகளவு பிரதிநிதித்துவத்தை மட்டுமே காட்டுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியலாக இல்லாது, வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படும் அனைத்து வேட்பாளர்களும் ஆளையாள் மிஞ்சிய அரசியல் ஞானம் உள்ளவர்களாகவும் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பது போல இருக்கும் அரசியலை தமிழர்களின் உரிமைக்காக எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை ஒற்றுமையாக சிந்திக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
இலங்கை அரசியலில் விலகி நின்று அரசியல் செய்வதைவிட ஒத்து நின்று அரசியல் செய்வதே இருக்கும் தமிழர் நிலங்களையாவது காப்பாற்ற முடியும்.ஒத்து நின்று அரசியல் செய்வது என்றால் அரசில் ஆட்சியாளர்களாக வகிக்கும் விதத்தில் செயல்படுதலே சிறந்த அரசியலாகும்.ஒட்டகம் தலைவைச்ச கதையாகும் வடகிழக்கு தமிழர்களின் பிரதேசம் என்ற தனித்துவம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.
இலங்கையர்கள் என்ற ஆட்சி முறைமையில் எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்வதில் புதிய சிந்தனை உடைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை.
பல ஊடகவியலாளர்கள் நிலைமையைப் புரிந்து ஒத்துப் போகும் அரசியல் பற்றி தமது கருத்துக்களை எழுத்தாக பதிவு செய்த போது,தமிழினத்துக்கு துரோகம் செய்கிறீர்களே என்ற தவறான போக்கினை இதுவரை காலமும் கடைப்பிடித்து நிர்பந்தத்தை ஏற்படுத்தியமையால்தான் தமிழர்தரப்பு அரசியல் நீர்த்துப் போன அரசியலாகவிருக்கின்றது.
தமிழத்தேசியக் கூட்டமைப்பின் ஒருமித்த முடிவாக இருக்கலாம், அல்லது கட்சிக்குள் இருக்கும் ஒருவரின் தான்தோன்றித்தனமான முடிவாக இருக்கலாம், ஆனால் வேட்பாளர்களின் தெரிவோ நியமனத் தெரிவோ எண்ணுக் கணக்கை வெளிப்படுத்துவதாக இருக்காது அவர்கள் இதுவரையும் இல்லாத நுட்பவினைத்திறனுடன் கூடிய அரசியலைச் செய்பவர்களாக இருக்க வேண்டும்.
ஏனெனில் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழர்களை இலவுகாத்த கிளியாக மாற்றிய கதை அனைவருக்கும் தெரியும்.
![]()