முச்சந்தி

செம்மணிப் புதைகுழியில் பச்சிளம் குழந்தையின் எலும்புக் கூடு மீட்பு;  மேலும் 3 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் 

செம்மணி மனித புதைகுழியில் நேற்று திங்கட்கிழமை பச்சிளம் குழந்தையின் எலும்புக் கூடுகள் உட்பட நான்கு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு ஏழாவது நாளாக நேற்று மேற்கொள்ளப்பட்டது. அகழ்வுப் பணிகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிதாக நான்கு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தமிடப்பட்டு இலக்கமிடப்பட்டது. இந்நிலையில் நான்கு மனித என்பு தொகுதிகள் மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.

மொத்தமாக இதுவரை 250 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 247 மனித என்பு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எடுக்கப்பட்ட சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தின் கட்டுக் காவலுக்கு வழங்கப்பட்டுள்ளது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button