சர்வதேச விசாரணை கோரி யாழில் பெரும் பேரணி; செம்மணிப் புதைகுழி அறிக்கை தீக்கிரை; கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி புதைகுழிப் பகுதி நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டதுடன் புதைகுழிப் பகுதிக்கு அருகில் பேராசிரியர்.ராஜ்சோமதேவாவின் கொடும்பாவி (உருவப்பொம்மை) எரிக்கப்பட்டதுடன்,மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் அவரால் நீதிமன்றத் துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை மாதிரிகளுக்கும் தீ வைக்கப்பட்
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம் மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும், செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி விசாரணை கோரியும் வடக்கு- கிழக்கு வலிந்து காணா மல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ச ங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவன யிர்ப்புப் பேரணியும், போராட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். செம்மணியில் முன்னெடுக்கப்பட்டது.
அரியாலை தபால்கட்டைச் சந்தியில் நேற்று முற்பகல் 10.45 மணியளவில் ஆரம் பமான மாபெரும் பேரணி செம்மணி சி த்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு முன்பா கச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் காணாமல் ஆக் கப்பட்டவர்களின் உறவுகள், முன்னாள் போராளிகள், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு.வேலன் சுவாமிகள், கிறிஸ்தவ மதகுருமார்கள், தமிழ்த்தேசியப் பேரவை யின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பின குமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத ரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளு மன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந் திரன், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சி வில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பெருமளவானோர் கலந்து கொண் டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர் கள் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம், செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி வேண்டும்!, சர்வதேச விசாரணை வேண் டும்!, செம்மணி மனிதப் புதைகுழி தொடர் பானவிசாரணைகளுக்குச் சர்வதேச நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பியும், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற் றும் சுலோக அட்டைகளை தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் உச்சக் கட்டமாகப் பேராசிரியர்.ராஜ் சோமதேவாவின் கொடும் பாவியும், அவரால் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்றாவது இடைக்கால அறிக்கை மாதிரிப் பிரதிகளும் தீயிட்டு எரிக் சுப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளின் போது யாழ்ப்பாணம் தீ தவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராக ரிப்பதாகப் போராட்டத்தில் கலந்து கொண் டவர்கள் தெரிவித்தனர். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத் தன்மையுடனும், சுயாதி னமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கச் சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியமெனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
மனிதப் புதைகுழி அகழ்வின் பிரதான அகழ்வாய்வாளரான பேராசிரி யர்.ராஜசோமதேவாவால் அண்மையில் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி வெளியில் 400 இற் கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களைக் கொன்று புதைத்தோம் எனச் சாட்சியம வித்த இராணுவத்தைச் சேர்ந்த சோமரத்ன ராஜபக்ச இன்றும் அதற்குச் சாட்சியாகச் சி றையிலிருக்கின்ற நிலையில், சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்டுள்ள 580 இற்கும் மேற்பட்ட மனிதக் எலும்புக் கூடுகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட் டவரிகளுடன் தொடர்புடையவை எனச் சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் அவை கடந்த காலத்தில் ஏற்பட்ட நோய்ப்பரவ லின் போது இறந்தவர்களுடையதாக இருக் கலாம் என வலியுறுத்தும் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அறிக்கையானது குறித்த மனிதப் புதைகுழியைத் தொடர்ந்தும் அக ழாமல் மூடி விடுவார்களோ? என்கிற அச்ச த்தை எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்க ளுக்கு என்ன நடந்தது? என்பதைத் தேடி அறிவதிலும், தமிழ் இன அழிப்பை நிராக ரிப்பதிலும் ஆதாரமாக இருக்கின்ற இந்த மனிதப் புதைகுழிகளை மூடி விடுவது நீதியை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு ஒப்பானதாகும். ஆகவேதான் இந்த இடைக் கால அறிக்கையை நிராகரித்துச் சர்வதேச பங்குபற்றுலுடன் கூடிய அகழ்வுப் பணியை முழுவீச்சில் செய்யவும். அதன் ஊடாகச் சர்வதேச நீதி விசாரணையைக் கோரவும் மிகப் பாரிய போராட்டத்தை வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகளின் சங்கத்தினராகிய நாம் முன்னெடுக்கப்படுகின்றோம்.
செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக் கொணரப்பட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு எனவும் போராட் டக்காரர்கள் தெரிவித்தனர்.
![]()