முச்சந்தி

அனோஜனை நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அனோஜனை நாட்டுக்கு அழைத்துவரும் பணிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

அனோஜன் விடயத்தில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பு செய்தனர். குறிப்பாக வெளிவிவகார அமைச்சு இப்போது வரையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சில உள்ளன. அவரை நாட்டுக்கு அழைத்து வரும் தினம் தொடர்பில் சரியாக கூற முடியாது. எனினும் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் வெளிவிவகார அமைச்சு அரசாங்கம் சார்பாக பங்களிப்பை செய்ததுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் தனிப்பட்ட ரீதியில் செலவு செய்து பங்களிப்பை செய்தனர். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றியை கூறிக்கொள்கின்றோம். அனைவரின் முயற்சிகளின் மூலமே அனோஜனை விடுதலை செய்துகொள்ள முடியுமாக இருந்தது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *