இலங்கை

பிரபாகரனின் இல்லக் காணியை பார்வையிட்ட திருமாவளவன்; மண்ணை எடுத்துச் சென்றார்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த காணியை பார்வையிட்டார்.

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில்,அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.

அந்தப் பகுதியில் தான் புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடுவது வழக்கமாகும்.

அந்த காணிக்குச் சென்ற தொல்.திருமாவளவன் அப்பகுதியில் இருந்து சிறிய பையில் மண்ணை அள்ளி எடுத்து சென்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *