இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல் திட்டம்; டிவிகே நிர்வாகி கைது!

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் நிர்வாகி ஒருவரும் அவரது நண்பர்களும்  நாகப்பட்டினத்தில் கைது செய்யப்பட்டனர்.

வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள், அந்த நிர்வாகியின் நண்பரின் வீட்டில் சோதனை நடத்தி, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ விற்கும் அதிகமான மெத்தாம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளைக் கைப்பற்றினர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் என் பூபாலன் (42), சட்டத்தரணி மற்றும் TVK இன் நாகப்பட்டினம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்.

இவரது நண்பரான ஜே.சுகன் என்ற சுகந்தன் (27), வேளாங்கண்ணியில் குத்தகைக்கு விடுதி நடத்தி வருபவர்; இவரது சகோதரர் ஜே பார்த்திபன் (29), டி சதீஷ் (30).

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மண்டலத்தைச் சேர்ந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் குழுவினர், நேற்று காலை 7 மணியளவில் சுகன் என்பவரது வீட்டிற்குச் சென்றனர்.

அங்கு 100 கிலோ போதைப்பொருளைக் கைப்பற்றியதாகக் கூறப்படும் நிலையில், அந்த இடத்தில் இருந்த சுகன், பார்த்திபன் மற்றும் சதீஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அவர்கள் மூவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதும், பூபாலன் என்பவர் இதற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவினர் பூபாலனின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.

அந்த நால்வரும் விசாரணைக்காக வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையில், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக பூபாலனை டி.வி.கே கட்சியிலிருந்து நீக்கியது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பூபாலனின் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான, உயர்தர போதைப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டதாக டி.வி.கே கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *