இலங்கை

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கவும்; நீதிமன்றத்தில் கோதாபய மனு

தனக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி தனது சட்டத்தரணி ஊடாக வெள்ளிக்கிழமை குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

இதன்படி தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறும் அவர் குறித்த மனுவின் ஊடாகக் கோரியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை அடிப்படையாயக் கொண்டு நான்கு மாதங்களுக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கோதாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *