ஹிஸ்புல்லாவின் முக்கிய சுரங்கப்பாதை தகர்ப்பு – 4.1 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவு

லெபனானில் ஹிஸ்புல்லா போராளிக் குழுவினால் கட்டப்பட்ட சுரங்கப்பாதையை இஸ்ரேலிய துருப்புகள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும், இஸ்ரேலிய படைகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையைத் தொடரவும், ஹிஸ்புல்லா மற்றும் கூடுதல் இடங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலியப் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஹிஸ்புல்லா கட்டளை மையம், வசிப்பிடங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை வைத்திருந்த, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் Ali al-Taher மலைத்தொடரின் கீழ் இருந்த ஒரு பரந்த சுரங்கப்பாதையே இவ்வாறு வெடி வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
மேற்படி சுரங்கப்பாதை தாக்கப்பட்டதை தொடர்ந்து 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
![]()