உலகம்

முடிவுக்கு வரும் ஈரான் போர் – ட்ரம்ப் நாள் குறிப்பு

ஈரானுடனான போர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு “உடனடியாக” முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

 

டல்லாஸில் நடைபெறவுள்ள குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்குப் புறப்படுவதற்கு முன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இதன்போது மேலும் தெரிவித்த அவர், தேர்தலுக்குப் பிறகு போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்களால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது. தேர்தலைத் தங்கள் பக்கம் திருப்ப அவர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்,” என்று கூறினார்.

 

ஈரானுடனான மோதல் சமீபத்தில் ஏழாவது மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் போர் நிறைவு பெறுவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

 

இதற்கிடையே அமெரிக்கா ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்ததைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்துள்ளது.

 

இந்தத் தீவிரமடைந்த மோதலால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது; ஜூலை மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக ‘பிரெண்ட்’ (Brent) கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *