பலதும் பத்தும்

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?

மருத்துவத்துறையால் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக புற்றுநோய் இருக்கிறது. அதுவும் புற்றுநோய் வீரியமடைந்து விட்டால் அது மரணத்தில் மட்டுமே முடிகிறது.. அதை தடுக்க இப்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. அதேநேரம் மருத்துவ உலகமும் முயற்சியை கைவிடவில்லை.

தொடர்ந்து புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவிலும் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் முக்கிய பிரச்சினை என்னவென்றால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல மணி நேரம் சிகிச்சை கொடுக்கப்படுகிறது..

ஆண்டிபயாடிக் மருந்துகளை குளுக்கோஸ் வழியாக நரம்பு வழியாகவே மருந்துகள் செலுத்தப்படுகிறது.. இது கிட்டத்தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை எடுக்கிறது. இந்நிலையில்தான், ஏழு நிமிடங்களில் ஆன்டிபயாடிக் ஊசியை தொடை மூலம் செலுத்தும் முன்னேற்றத்தை மருத்துவர்கள் அடைந்துள்ளனர்..

Roche நிறுவனம் தாயரித்துள்ள Atezolizumab என்கிற புதிய இம்யூனோதெரபி ஊசி இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 7 நிமிடங்களில் தொடைப்பகுதியில் சாதாரண ஊசி மூலம் இந்த மருந்தை செலுத்தமுடியும். இதனால் மருத்துவமனையில் தங்கும் நேரம் பெருமளவு குறையும். அதேநேரம், ஒரு டோஸின் விலை சுமார் ரூ.3.7 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button