ஷிரந்தியை தேடி சிங்கப்பூர் செல்லும் ரணில் – சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறிய விடயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்து வரும் நாட்களில் சிங்கப்பூர் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூர் சென்ற நிலையில் நாடு திரும்பாத நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் நோக்கி பயணமாகவுள்ளார். சிங்கப்பூரின் பிரபல வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெறும் நோக்கில் ரணில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் செல்லும் ரணில்
இவ்வாறான நிலையில் விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ச, அவசரமாக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் பொய்யான தகவலை வழங்கி, ஷிரந்தி தப்பிச் சென்றுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரணிலின் சிங்கப்பூர் பயணமும் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசும்பொருளாக மாறியுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படும் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகிய இருவரையும் தேடித் கண்டுபிடிப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க அங்கு சமூக வலைத்தளங்களில் அதிகம் நகைச்சுவையாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()