உலகம்

ஓமன் மீது குண்டுவீசுவோம்: டொனால்ட் டிரம்ப் மிரட்டல்

ஈரானுடன் அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டு வரும் அமைத்துப் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாய் இருந்தால், அமெரிக்காவின் நட்பு நாடான ஓமன் மீதும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான ‘ஹோர்முஸ் நீரிணையை’ மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளும் ஈரானுடன் தனித்தனியாகப் பேசி வருகின்றன.

அமெரிக்க-ஈரான் போரால் கடந்த ஆறு மாதங்களாக இந்தப் கடல்வழிப் போக்குவரத்துப் பாதை பெரும்பாலான அளவில் முடங்கியுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசி அழித்துவிடுவோம் எனத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஓமனுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் இருப்பதாக ஈரான் கூறிய சில மணி நேரங்களிலேயே டிரம்பின் இந்த மிரட்டல் வெளிவந்துள்ளது.

அதேவேளையில், ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையுடன் நேரடித் தொடர்பு இருப்பதாக டிரம்ப் கூறியதை ஈரான் மறுத்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க அதிகாரிகளுக்கும் IRGC-க்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை; டிரம்பின் கூற்று போரில் சந்தித்த தோல்விகளால் ஏற்பட்ட கற்பனையே” என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button