நிகழ்வுகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவைக் கந்தன் வருடாந்த மகோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்று விநாயகர் , சிவன் உமாதேவியார் சமேதராயும் மற்றும் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பம் எழுந்தருளி கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
இருபத்தைந்து நாட்களைக் கொண்ட இவ்வாலய மகோற்சவப் பெருவிழாவில் அடுத்த மாதம் 11ம் திகதி தேர்த் திருவிழாவும் ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மாவை கந்தனின் கொடியேற்றத் திருவிழாவில் கலந்துகொண்டிருந்தனர்.
![]()