ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்தது.
இந்தியாவில் ‘இஸ்ரோ’ மூலமாக செயற்கைக் கோள்களை ஏவுதல், சந்திரயான் போன்ற பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பையும் அனுமதிக்கும் உத்தரவை பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பித்தார்.
இதையடுத்து, 2022 ஹைதராபாத்தைச் சேர்ந்த ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற சப்-ஆர்பிட்டல் வகை சிறிய ராக்கெட்டை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் தனது முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான திட்டத்தை வடிவமைத்தது.
அதன்படி, ‘விக்ரம்-1’ ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததை தொடர்ந்து, இன்-ஸ்பேஸ் மற்றும் இஸ்ரோவின் ஒருங்கிணைப்புடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணிக்கு ‘விக்ரம்-1’ ராக்கெட், விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என பெயரிடப்பட்டிருந்தது.
நேற்று ஏவுதலுக்காக ராக்கெட் தயாராக இருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், கவுன்ட்-டவுன் நேரத்தை தாண்டி கூடுதலாக 35 நிமிடங்கள் ராக்கெட் புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.
இதேவேளை, கோளாறு சரிசெய்யப்பட்டு, 12.05 மணிக்கு ‘விக்ரம்-1’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
அதிவேகமாக விண்ணில் பயணித்த ராக்கெட் அடுத்தடுத்த நிலைகளை துல்லியமாக கடந்து, 450 கி.மீ. தொலைவில் உள்ளதிட்டமிட்ட சுற்றுவட்டப் பாதையை 16 நிமிடங்களில் அடைந்தது.
![]()