இலங்கை

செம்மணியில் அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட எலும்புக்கூடு மீட்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள்  (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன.

இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 434 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இன்று 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு, கால்கள் மடக்கப்பட்டு அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற 2ஆம் கட்ட அகழ்வின் போதும் இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்டிருந்த ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button