பலதும் பத்தும்

சாப்பிட்டதும் குளிக்கலாமா?

சாப்பிட்டதும் குளிக்கும் போது, உடலின் இரத்த ஓட்டம் சருமத்தை நோக்கித் திசை திரும்பும். இதனால், செரிமான மண்டலத்துக்குப் போகும் இரத்த ஓட்டம் குறைந்து, செரிமானம் மெதுவாகும்.

சாப்பிட்டதும் குளிப்பதால் உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றம் ஏற்படும். இது ரத்த அழுத்தத்தைக் குறைத்து, தலைசுற்றல் அல்லது மயக்கத்தை ஏற்படுத்தலாம்.

சாப்பிட்டதும் குளித்தால், உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் தான் உடம்பு கவனம் செலுத்தும். இதனால், உணவில் இருந்து சத்துக்களை உறிஞ்சும் வேகம் குறையும்.

சாப்பிட்டாலே உடலுக்கு ஒருவித தளர்வு கிடைக்கும். குளிக்கும்போது இந்த தளர்வு இன்னும் அதிகமாகி, மந்தமான நிலைக்குக் கொண்டு செல்லும். இதுவும் செரிமானத்தைக் குறைக்கும்.

சாப்பிட்டதும் குளிப்பது வயிறு உப்புசம், தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை மோசமாக்கும். குறிப்பாக, சென்சிட்டிவ் வயிறு உள்ளவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

சாப்பிட்ட பிறகு குளிப்பது இதய ரத்த நாள அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு இது பெரிய பிரச்சனையாக மாறலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button