இலங்கை

வடக்கின் அடுத்த முதலமைச்சர் நானே;  சுமந்திரனிடம் கூறுங்கள்; அர்ச்சுனா

நானே வடக்கு மாகாண முதலமைச்சராக வருவேன். அங்கு விசேட அபிவிருத்தி நிதியத்தை தாபித்தால் அதன் பணத்தை சுமந்திரனால் பயன்படுத்த முடியாது என்பதனை அவரிம் கூறுங்கள் என்று யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் முன்வைக்கப்பட்ட, அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தை தாபித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அர்ச்சுனா எம்.பி மேலும் தெரிவிக்கையில்,

சாணக்கியன் எம்.பி முன்வைத்துள்ள வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்குரிய தனி பண அலகை அதாவது எங்களை நாங்களே ஆளுகின்ற, எங்களுக்கான அபிவிருத்தியை செய்யக்கூடிய புலம்பெயர் நாட்டில் வாழும் மக்கள் எமது மக்களை அபிவிருத்தி செய்யும் அலகை உருவாக்கும் திட்டத்தை உருவாக்கும் இந்த பிரேரணையை நான் வரவேற்கின்றேன்.

எவ்வாறாயினும் நான்தான் வடக்கு மாகாண முதலமைச்சராக வருவேன். இதனால் அந்த பணத்தை பயன்படுத்துவது கஸ்டம் என்று சுமந்திரனிடம் கூறுங்கள் என்று சாணக்கியன் எம்.பி.யை பார்த்து தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button