இலங்கை

அரசியல் சர்ச்சையாக மாறியுள்ள சுரேஷ் சலே விவகாரம் – பெரும் அச்சத்தில் முக்கிய அரசியல்வாதிகள்

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுரேஷ் சலே விவகாரம்

சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சில தரப்பினர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியல் சர்ச்சையாக மாறியுள்ள சுரேஷ் சலே விவகாரம் - பெரும் அச்சத்தில் முக்கிய அரசியல்வாதிகள் | Suresh Saleh Arrested Cid Investigation Issue

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் தற்போது உயிரிழந்துள்ள போதிலும், அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் எஞ்சிய உறுப்பினர்கள் அல்லது ஆதரவளித்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சுரேஷ் சலே மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் அவருக்கே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். அவர் உடலளவில் பலவீனமடைந்தால், தமக்கான வழக்கை முன்னெடுத்துச்செல்ல தேவையான ஆற்றலை இழக்க நேரிடும்.

அரசியல் பயணத்தில் பின்னடைவுகள்

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், அதற்கு ஒரே வார்த்தையில் சான்றிதழ் வழங்க முடியாது.

அரசியல் சர்ச்சையாக மாறியுள்ள சுரேஷ் சலே விவகாரம் - பெரும் அச்சத்தில் முக்கிய அரசியல்வாதிகள் | Suresh Saleh Arrested Cid Investigation Issue

நாட்டில் புதிய அரசியல் சக்தியொன்று உருவாகும் என தாம் நம்பவில்லை. தற்போதுள்ள அரசியல் சக்தியே தொடர்ந்தும் வெளிப்படும்.

Politics

நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் அரசியல் எதிர்பார்ப்புகளுடன் செயற்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது அரசியல் பயணத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம் என்றும் குறிப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button