இலங்கை

PTAஜ நீக்கினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் தப்பி விடுவார்களா..! தவறான பாதையில் அநுர

பல தசாப்த காலமாக விவாதத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இந்த நாட்டிலிருந்து முற்றாக நீக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்ட்டு வருகின்றன.

இந்நிலையில், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாக, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதையும் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட புதிய சட்டமொன்றை அறிமுகப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது இவ்வாறிருக்க அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஏற்கனவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அரசாங்கம் என்றும் முஹம்மது சோஹைல் என்ற இளைஞனை இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் எவ்வித ஆதாரமும் இன்றி 9 மாதங்கள் தடுத்துவைத்து, பின்னர் நீதிமன்றத்தால் முழுமையாக விடுவிக்கப்பட்டார் என்ற சம்பவத்தை மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் நினைவுபடுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கினால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகள் தப்பி விடுவார்களா என்ற வினாவும் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button