உலகம்

பீஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் விமானம் மோதி விபத்து: விமானி பலி

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள மிக உயரமான வானளாவிய கட்டிடமான ‘சிடிக் டவர்’ மீது சிறிய ரக இலகுரக விளையாட்டு விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதன் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.

சாவோயாங் மத்திய வணிகப் பகுதியில்  இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தின்போது அந்த ஒற்றை எஞ்சின் கொண்ட சிறிய விமானத்தில் விமானி மட்டுமே இருந்துள்ளார்.விமானம் மோதியதில் கட்டிடத்திற்கு வெளியே இருந்த 13 பேர் காயமடைந்து, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர விசாரணை

இந்த மோதலில் கட்டிடத்தின் வெளிப்புறத்திலிருந்த இரண்டு பெரிய கண்ணாடி பேனல்கள் உடைந்ததைத் தவிர வேறு பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பீஜிங்கின் மிக உயரமான கட்டிடத்தில் விமானம் மோதி விபத்து: விமானி பலி | Plane Crashes Into Beijing S Tallest Building

 

இந்த விபத்துக்கான முதன்மைக் காரணம் என்ன என்பது குறித்து சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button