செம்மணி மனிதப் புதைகுழி நீதிக்காக அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு!

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மக்கள் செயல் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியை வலியுறுத்தியும் கடந்த ஆண்டு முன்வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை மீண்டும் நிலைநிறுத்தியும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த உரிமைப்பந்தம் அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வானது, 28-06-2026 அன்று மாலை 4.00 மணிக்கு செம்மணி அணையா விளக்கு திடல் பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே மனித உரிமைகள் மற்றும் நீதியை மதிக்கும் பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புகள், மதத் தலைவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துமாறு மக்கள் செயல் அமைப்பு அன்புடன் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


![]()
