இலங்கை
மகிந்தவின் மகனிடம் 6 மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித்த ராஜபக்ச, சுமார் 6 மணித்தியால விசாரணையின் பின்னர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறினார்.
மிரிஹான பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய விசாரணைக்காகவே அவர் நேற்று வியாழக்கிழமை காலை அங்கு அழைக்கப்பட்டிருந்தார்.
பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச சுமார் 6 மணித்தியால விசாரணையின் பின்னர் பிற்பகலில் அங்கிருந்து வெளியேறினார்.
![]()