இந்தியா

மேடை இறங்கிச் சென்று கர்ப்பிணிக்கு பணி நியமனம் வழங்கிய முதலமைச்சர்!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 401 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதில் 383 உதவிப் பொறியாளர் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் தங்களது பணி நியமன ஆணையை பெற்றனர்.

மேலும் நடப்பு ஆண்டிற்குள் மின்வாரியத்தில் 15,000 பேரை நியமிக்கும் ஆணைக்கு முதலமைச்சர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

அப்போது, நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவர் இருக்கும் இடத்திற்கே சென்று பணி நியமன ஆணையை முதலமைச்சர் விஜய் வழங்கினார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button