திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் – யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது

நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்ட இயன்முறை மருத்துவர் தொடர்பான விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கண்டி, தெல்தெனியாவில் வாகனத்தில் சடலமாகக் மீட்க்கப்பட்ட இளம் இயன்முறை சிகிச்சையாளரின் (Physiotherapist) தொடர்பில் சந்தேகநபரான காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரும் அவரது மனைவியும் நேற்று வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை நுவரெலியா பொறுப்பு சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்தள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்தவர் அம்பாறை மருத்துவமனையில் பணியாற்றி வந்த 33 வயது இயன்முறை மருத்துவர் என்றும் வெலிகமவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()