பலதும் பத்தும்

தங்கம் ஒரு அவுன்ஸ் 35,000 டொலர் வரை செல்லும்- கியோசாகியின் அதிர்ச்சி கணிப்பு

Rich Dad Poor Dad நூலாசிரியர் மற்றும் முதலீட்டு நிபுணரான ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki), தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்து அதிர்ச்சி அளிக்கும் கணிப்பை வெளியிட்டுள்ளார்.

2026 ஜனவரியில் தங்கம் 5,595 டொலர் வரை உயர்ந்தது, வெள்ளி 121 டொலர் வரை சென்றது. ஆனால் ஜூன் மாதத்தில் தங்கம் 4,152 டொலராகவும், வெள்ளி 64 டொலராகவும் சரிந்தது.

வட்டி விகிதம் உயரும் வாய்ப்பு, வலுவான டொலர் மற்றும் மத்திய கிழக்கு அமைதி சிக்கல்கள் காரணமாக தங்கத்தின் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கியோசாகி, தான் விற்கப்போவதில்லை என்றும் காத்திருப்பதாக்வும், அவர் எதற்காக காத்திருக்கிறார் என்பது தனக்கு ஏற்க்கெனவே தெரியும் என்றும் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில், தங்கம் ஒரு அவுன்ஸ் 35,000 டொலர் (சுமார் ரூ. 33 லட்சம்), வெள்ளி 200 டொலர் வரை உயரவும் வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.

Kiyosaki-Predicts-Gold-35K-Silver-200-USD

அவரது கருத்துப்படி, விலை குறைவது முதலீட்டாளர்களை பயமுறுத்தினாலும், உண்மையான வாய்ப்பு அப்போது தான் உருவாகிறது. “விலை அல்ல, சூழ்நிலையே முக்கியம். அரசியல் மற்றும் வங்கி தலைவர்கள் பொருளாதாரத்தை சரி செய்கிறார்களா அல்லது மோசமாக்குகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஜே.பி. மோர்கன் தங்கம் 6,000 டொலர் வரை செல்லும் என எதிர்பார்க்கிறது. ஆனால் கோல்ட்மேன் சாக்ஸ் 4,900 டொலர் என குறைத்துள்ளது.

தங்கம், வெள்ளி, பிட்காயின், எத்தீரியம் ஆகியவற்றை கண்காணித்துவரும் கியோசாகி, அவற்றின் விலை மீண்டும் உயர்வதற்கான சிக்னல்களுக்காக காத்திருக்கிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button