பலதும் பத்தும்

வாயுப் பிரச்சனை வரக்கூடாதா? அப்போ இந்த பொருள்கள் போதும்..

ஆயுர்வேத முறையில் வாயு பிரச்சனையை சரி செய்ய உதவும் வீட்டு பொருள்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

வாயு பிரச்சனை

வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், அஜீரணம் மற்றும் வயிற்றில் கனமான உணர்வு போன்ற பிரச்சனைகள் இப்போது அனைவருக்கும் உள்ளது.

செரிமான அமைப்பு மற்றும் தவறான உணவுப் பழக்கங்களே இதற்கு காரணங்களாக கருதப்படுகிறது. சரியான உணவு, லேசான நடைப்பயிற்சி, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வயிறு பிரச்சனைகளை சரி செய்யலாம்

அந்த வகையில் இந்த பிரச்சனையை ஆயுர்வேத முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்.

பெருஞ்சீரகத் தண்ணீர்

உடலை குளிர்ச்சியாக வைப்பதற்கு பெருஞ்சீரக தண்ணீர் உதவுவதுடன், செரிமானத்திற்கும் உதவி செய்கின்றது. வாயு பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி பெருஞ்சீரகத்தினை வேக வைத்து தண்ணீரை குடிக்கவும்.

மேலும் வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதால் பலர் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருகின்றனர். செரிமான அமைப்பினை வலுப்படுத்தவும் செய்கின்றது.

வாயுப் பிரச்சனை வரக்கூடாதா? அப்போ இந்த பொருள்கள் போதும்.. | Ayurvedic Foods That Help To Get Rid Of Acidity

இஞ்சி மற்றும் எலுமிச்சை

ஆயுர்வேதத்தில் இஞ்சி செரிமானத்திற்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது. வயிற்றில் உள்ள அதிகப்படியான வாயுவை குறைக்க உதவுகின்றது.

இதே போன்று எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்வதாலும் செரிமானம் மேம்படும். இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு இவற்றுடன் கருப்பு உப்பு சேர்த்து குடிக்கலாம். இவை வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைக்கு தீர்வாகும்.

பெருங்காயம் 

வாயு தொல்லை சரி செய்வதற்கு நமது முன்னோர்கள் முதலில் எடுத்துக் கொள்ளும் வீட்டு வைத்தியம் என்னவெனில் பெருங்காயம் தான்.

பெருங்காயம் வாயு பிரச்சனை மட்டுமின்றி, செரிமானத்தையும் மேம்படுத்துகின்றது. சுடு தண்ணீரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் சில நிமிடங்களில் நல்லதொரு பலனை தெரிந்து கொள்ளலாம்.

வாயுப் பிரச்சனை வரக்கூடாதா? அப்போ இந்த பொருள்கள் போதும்.. | Ayurvedic Foods That Help To Get Rid Of Acidity

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button