உலகம்

நான்கு நியூசிலாந்து எம்.பி.களுக்கு சீனா பயணத் தடை!

தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டமைக்காக நான்கு நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனா ஓராண்டு பயணத் தடை விதித்துள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சீனா இத்தகைய நடவடிக்கையை எடுப்பது இதுவே முதல் முறையாகும் என்று வெலிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்தப் பயணத்தின்போது, ​​தாய்வான் வெளிவிகார அமைச்சர் லின் சியா-லுங் (Lin Chia-lung) உட்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் அவர்கள் சந்திப்புகளை நடத்தினர்.

உள்ளூர் ஊடகங்களின் தகவலின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தாய்வான் பயணத்திலிருந்து திரும்பிய பின்னரே சீனா விதித்த தடை குறித்த தகவலைப் பெற்றனர். மன்னிப்புக் கோரப்பட்டால், தடையைக் குறைக்கலாம் அல்லது நீக்கலாம் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை தாய்வானுக்கு பயணித்த அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு சீனா இதற்கு முன்பும் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button