உலகம்

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 9 பேர் பலி

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா மீது இஸ்ரேலிய படைகள்  வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

காஸாவின் பல்வேறு முக்கிய பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய 4 வான்வழித் தாக்குதலில் 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 9 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 அக்டோபர் மாதம் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிறகு அவ்வப்போது இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

காஸாவில், போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மட்டும் இதுவரை 936 பேர் கொல்லப்பட்டதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button